துபாய் ஓபன் டென்னிஸ்: செக்குடியரசு வீராங்கனை கிரெஜ்சிகோவா 'சாம்பியன்'

துபாய்,

துபாய் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையும், 3 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான இகா ஸ்வியாடெக் (போலந்து), தரவரிசையில் 30-வது இடத்தில் உள்ள செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவாவுடன் மோதினார்.

1 மணி 31 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் கிரெஜ்சிகோவா 6-4, 6-2 என்ற நேர்செட்டில் ஸ்வியாடெக்குக்கு அதிர்ச்சி அளித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். மகுடம் சூடிய கிரெஜ்சிகோவா 900 தரவரிசை புள்ளிகளுடன் ரூ.3¾ கோடியை பரிசாக தட்டிச் சென்றார். 2-வது இடம் பெற்ற இகா ஸ்வியாடெக் ரூ.2¼ கோடியை பரிசாக பெற்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.