மகளிர் டி20 உலகக்கோப்பை: 6வது முறையாக உலக சாம்பியன்! தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அவுஸ்திரேலியா சாதனை


பெண்கள் டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது.

உலக கோப்பை இறுதிப் போட்டி

8வது பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் கடந்த 10ம் திகதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது.
அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழந்து 156 ஓட்டங்கள் குவித்து இருந்தது.

அணியில் அதிகபட்சமாக பெத் முனே 53 பந்துகளில் 74 ஓட்டங்கள் குவித்து இருந்தார்.

 தென் ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை ஷபின் இஸ்மாயில், மரிசான் கேப் ஆகியோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.

157 ஓட்டங்கள் இலக்கு

20 ஓவர்களுக்கு 157 ஓட்டங்கள் என்ற இலக்குடன் இரண்டாவது பேட்டிங்கில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி வெற்றி இலக்கை அடைய மிகப்பெரிய போராட்டத்தை வெளிப்படுத்தியது.

இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணியால் 6 விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

தென் ஆப்பிரிக்க அணியில் அதிரடியாக விளையாடிய லாரா வால்வார்ட் 61 ஓட்டங்கள் விளாசினார், அவரது விக்கெட் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.


6 முறையாக சாம்பியன்

தென் ஆப்பிரிக்க அணியை 137 ஓட்டங்களில் வீழ்த்தியதன் மூலம் அவுஸ்திரேலிய அணி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி கோப்பையை கைப்பற்றியுள்ளது.
அவுஸ்திரேலிய அணியின் இந்த வெற்றியின் மூலம் மகளிர் டி20 உலகக் கோப்பையை 6 வது முறையாக அவுஸ்திரேலிய அணி வென்றுள்ளது.

மகளிர் டி20 உலகக்கோப்பை: 6வது முறையாக உலக சாம்பியன்! தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அவுஸ்திரேலியா சாதனை | Women T20World Cup Australia Champion For 6Th TimeTwitter



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.