மாலை மாற்றியதும் மணப்பெண் காலில் விழுந்த வெளிநாட்டு மணமகன்! கிண்டல் செய்த தமிழ் நடிகர்..வைரல் வீடியோ



இந்திய பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டினரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

வெளிநாட்டினரின் திருமணம்

வெளிநாட்டைச் சேர்ந்த ஆண்-பெண் ஜோடி இந்திய பாரம்பரியப்படி திருமணம் செய்து கொண்டனர்.

அவர்கள் மாலை மாற்றிக் கொண்ட பின்னர், மணமகள் கணவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்.

உடனே மணமகனும் சற்றும் யோசிக்காமல் மணமகளின் காலில் விழுந்தார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் சிரித்தனர்.


வைரலான வீடியோ

ஆனால் இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பலரும் ஆண்-பெண் சமம் என்பதை வெளிநாட்டவர்கள் என்றும் உணர்த்துவார்கள் எனக் கூறி பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் நடிகர் சதீஷ் இந்த வீடியோவை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அத்துடன், ‘இந்த தெளிவு உங்களை எங்கேயோ கொண்டு செல்லும்’ என கிண்டலாக பதிவிட்டுள்ளார்



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.