மைசூர்: மைசூரு – சென்னை இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள் கற்களை வீசியது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கர்நாடகா மாநிலம் மைசூரு – சென்னை இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், கிருஷ்ணராஜபுரம் – பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சிலர் அந்த ரயில் மீது கற்கள் வீசினர். இதனால் ரயிலின் 2 ஜன்னல்கள் சேதமடைந்தன. இந்த தாக்குதலில் பயணிகள் யாரும் காயமடையவில்லை.
இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த மாத தொடக்கத்தில், தெலங்கானாவின் செகந்திராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் சென்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசினர். இதேபோல் வெவ்வேறு மாநிலங்களில் ஆங்காங்கே வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கற்களை வீசியது தொடர்பாக அந்தந்த ரயில்வே போலீசார், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் சிலரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.