வங்காள விரிகுடாவில் புதிய தாழமுக்கம்! வடக்கு-கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்


மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளதாக யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

அவர் தனது முகநூல் ஊடாக இதனை பதிவிட்டுள்ளார்.  

அந்த பதிவிற்கமைய,நாளை (27) முதல் 01.03.2023 வரை வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் சிறிய அளவில் மழை பெய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம்

வங்காள விரிகுடாவில் புதிய தாழமுக்கம்! வடக்கு-கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் | New Depression In Bay Of Bengal North East Alert

இதேவேளை மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளதாகவும் இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்யும் வாய்ப்புள்ளது எனவும் எதிர்வு கூறியுள்ளார்.

மேலும் இத் தாழமுக்கம் தொடர்பான மேலதிக விபரங்கள் பின்னர் இற்றைப்படுத்தப்படும் என அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.