வரிச்சியூர் செல்வம் சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா? கிறுகிறுக்க வைக்கும் மாச செலவு!

மதுரையை பூர்வீகமாக கொண்டு செயல்பட்ட பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம். கட்டப் பஞ்சாயத்து, ஆள் கடத்தல், கொலை, கொலை மிரட்டல், ரவுடியிசம் என அட்ராசிட்டிகளுக்கு பஞ்சமின்றி வாழ்ந்துள்ளார். இவர் மீது ஏகப்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. பலமுறை சிறைவாசம் அனுபவித்துள்ளார். வரிச்சியூர் செல்வம் பேரைக் கேட்டாலே கிலோ கணக்கில் நகைகளை அணிந்து கொண்டு செல்லும் காட்சி தான் பலருக்கும் நினைவில் தோன்றும்.

திருந்தி வாழும் ரவுடி

இவ்வாறு நினைப்பதை பெருமையாக கருதுவதாக அவரே பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். இவரை என்கவுன்ட்டர் செய்ய போலீசார் திட்டமிட்ட நிகழ்வுகள் கூட அரங்கேறின. ஒருகட்டத்தில் போலீசார் எடுத்த நடவடிக்கையால் மனம் திருந்தி ரவுடியிசத்தை கைவிட்டு சாதாரண வாழ்க்கைக்கு திரும்பினார். இனி தவறு செய்ய மாட்டேன் என்று போலீசாரிடம் எழுத்துப்பூர்வ உறுதிமொழி பத்திரமும் வழங்கியுள்ளார்.

வெளிநாடு ஏக்கம்

தற்போது வீடு, சினிமா, பேரன், பேத்திகள், சுற்றுலா என ஜாலியாக பொழுதை கழித்து கொண்டிருக்கிறார். ஒருசில வழக்குகள் மட்டும் நிலுவையில் இருக்கும் சூழலில் நடப்பாண்டு இறுதிக்குள் அவற்றையும் முடித்து விட மும்முரம் காட்டி வருகிறார். அதன் பிறகு பாஸ்போர்ட் வாங்கி கொண்டு வெளிநாடுகளுக்கு சென்று வர வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்.

கோமாளியாக்கிய நெட்டிசன்கள்

வழக்குகள் நிலுவையில் இருப்பதால் பாஸ்போர்ட் கிடைக்காததை ஒரு குறையாகவே பார்த்து வருகிறார். அதேசமயம் ரவுடியாக இருந்த தன்னை நெட்டிசன்கள் கோமாளியாக மாற்றிவிட்டனர் என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இவரது பேட்டிகள் சமூக வலைதளங்களில் பெரிதும் வைரலாகி வருகின்றன.

அப்பாவின் சொத்துகள்

இந்நிலையில் தனது சொத்து மதிப்பு, மாதம் எவ்வளவு செலவாகிறது, பணம் எப்படி வருகிறது போன்ற விஷயங்களை யூ-டியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் விரிவாக பேசியுள்ளார். இந்த தகவல்கள் தற்போது விவாதப் பொருளாக மாறி நெட்டிசன்கள் கலவையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். அதில், என் அப்பாவின் சொத்துகள் நிறைய இருக்கின்றன.

வரிச்சியூர் செல்வம் பேட்டி

அதனால் இயற்கையாகவே வசதியான குடும்பத்தை சேர்ந்தவன். என்னிடம் நிறைய கார்கள், நகைகள், மோதிரங்கள், கைக் கடிகாரங்கள் உள்ளன. நான் மிகவும் ஜாலியான டைப். என்னுடைய கழுத்தில் போட்டிருக்கும் மிகவும் மொத்தமான நகைக்கு மட்டும் இதுவரை 45 லட்ச ரூபாய்
வருமான வரி
கட்டியுள்ளேன். என்னிடம் லேண்ட் ரோவர், பார்ச்சூனர், எம்.ஜி கிளாசர் என 7 கார்கள் வைத்திருக்கிறேன்.

அழிக்க பிறந்தவன்

இங்கு மட்டும் 3 கோடி ரூபாய்க்கு மேல் என்னுடைய சொத்துகள் இருக்கும். வரிச்சியூரில் நிறைய இடங்கள் உள்ளன. இவை எத்தனை கோடிக்கு போகும் என்று தெரியாது. விளாங்கூரில் உள்ள இடம் இன்றைய நிலவரத்திற்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் போகும். இவையெல்லாம் என் அப்பாவிடம் இருந்து வந்தவை. நான் அழிக்க மட்டுமே பிறந்துள்ளேன். சம்பாதிக்க பிறக்கவில்லை. வேறெந்த தொழிலும் ஈடுபடவில்லை.

மாத செலவு

என்னுடைய மகன், மருமகன் எல்லாம் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் எனக்கு மாதம் 3 அல்லது 4 லட்ச ரூபாய் வரை கொடுப்பார்கள். இதை மட்டும் வாங்கி செலவழித்து விடுவேன். அதுமட்டுமின்றி மற்றவர்களுக்கு வாரி கொடுத்து கொடை வள்ளலாக தான் இருக்கிறேன். மற்றவர்களிடம் பிடுங்கி சாப்பிடும் பழக்கம் இல்லை. சுமார் 8 ஆண்டு காலத்தில் வழக்கறிஞர் செலவிற்காக மட்டும் 7 கோடி ரூபாய் அளவிற்கு செலவழித்துள்ளேன் என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.