2024 தேர்தலுக்கு பிறகு பாஜக அழித்தொழிக்கப்படும்; லாலு பிரசாத் யாதவ் சூளுரை.!

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பீகாரின் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள லாரூயாவில் நடந்த பேரணியில் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, பீகாரை காட்டு ராஜ்ஜியத்தில் மூழ்கடித்ததற்கு முதல்வர் நிதிஷ் குமாரே காரணம் என்றும், ஜனதா தளத்துடனான நிதிஷ்குமாரின் கூட்டணி என்பது தண்ணீரில் எண்ணெய் கலக்க முயற்சி என்றும் அவர் கூறினார்.

இந்தநிலையில் 2024ம் ஆண்டுக்கு பிறகு பாஜக அழிக்கப்படும் என பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வந்த பிறகு தனது முதல் முக்கிய உரையில், பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் இன்று பாஜக மீது முன்னணி தாக்குதலைத் தொடங்கினார். வலதுசாரி கட்சியான பாஜக, நாட்டை சாதி மற்றும் மத அடிப்படையில் பிளவுபடுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவை நாட்டின் சிறுபான்மையினருக்கு எதிரானவை என்று பீகாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், தனது டெல்லி இல்லத்தில் இருந்து ஆர்ஜேடியில் அங்கம் வகிக்கும் மகாகத்பந்தன் அல்லது மகா கூட்டணியின் பேரணியில் ஆற்றிய மெய்நிகர் உரையில் கூறினார்.

“பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சிறுபான்மையினர் மற்றும் சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு எதிரானது. 2024 லோக்சபா மற்றும் 2025 சட்டமன்றத் தேர்தல்களில் நாங்கள் (மகா கூட்டணி) பாஜகவை அழித்து விடுவோம்.

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இரண்டும் இடஒதுக்கீட்டிற்கு எதிரானவை. அரசியலமைப்பை மாற்றி இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்கின்றன.

எங்கள் போராட்டம் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்துடன் உள்ளது. பாஜக ஆர்எஸ்எஸ் வழிமுறைகளை பின்பற்றுகிறது. நாட்டு மக்களுக்கு எதிரான இயக்கம் ஆர்எஸ்எஸ் மற்றும் கட்சி பாஜக. அதனால் அதை அழிக்க வேண்டும் என்று கூறுகிறோம். அதற்கான முன்முயற்சி பீகாரில் எடுக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான மத்திய அரசு வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறக்கு நாடு முழுவதும் இருந்து அழிக்கப்படும்.

ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதியான எம் எஸ் கோல்வால்கர் தனது ‘பஞ்ச் ஆஃப் தாட்ஸ்’ என்ற புத்தகத்தில் தலித்துகள் மற்றும் ஓபிசிக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்துள்ளார். ‘பஞ்ச் ஆஃப் தாட்ஸ்’ என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளவற்றின்படி பாஜகவினர் செயல்படுகிறார்கள். பாஜக முழுவதுமாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. 2024 பொதுத் தேர்தல்களிலும் 2025 மாநிலத் தேர்தல்களிலும் முறையே தாமரைக் கட்சி அழிந்துவிடும் என்று நான் நம்புகிறேன்.

இந்த பேரணியில் கலந்து கொள்ள விரும்பினாலும், எனது உடல்நிலை என்னை அனுமதிக்கவில்லை. நான் நன்றாக குணமடைந்து வருகிறேன். உங்கள் பிரார்த்தனைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி. எனது மகள் ரோகினி ஆச்சார்யாவுக்கு நான் எப்போதும் கடமைப்பட்டிருப்பேன். தன் ஒரு சிறுநீரகத்தை எனக்கு தானம் செய்தவர் அவர்” என்று லாலு பிரசாத் யாதவ் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.