வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காத்மாண்டு:
நேபாள அரசியலில் இன்று திடீர் திருப்பமாக, கூட்டணி கட்சியைச் சேர்ந்த
அமைச்சர் ராஜினாமா செய்தார். இதனால் கூட்டணியில் முறிவு ஏற்படும் ஆபத்து
ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுளளன.
நேபாளத்தில், பார்லிமென்ட்
தேர்தல் நவம்பர் 20ல் நடந்தது. இதில் ஆளுங்கட்சியான நேபாளி காங்கிரஸ்,
மக்கள் பிரதிநிதி சபையின் 275- இடங்களில், 87 ல் வென்று தனிப் பெரும்
கட்சியாக உள்ளது. நேபாள கம்யூனிஸ்ட் – ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட்
லெனினிஸ்ட் ஆகிய கட்சிகள் ஆதரவுடன் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்
புஷ்பகமல் பிரசண்டா, 68, அந்த நாட்டின் பிரதமராக கடந்தாண்டு டிச.,26ல்
பொறுப்பேற்றார்.
தேர்தலுக்கு முன், முன்னாள் பிரதமர் புஷ்ப
கமல் பிரசண்டா தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியுடன், நேபாளி காங்கிரஸ்
கூட்டணி ஒப்பந்தம் செய்தது. இதன்படி, ஐந்து ஆண்டு கால ஆட்சியில், இரு
கட்சிகளும் தலா இரண்டரை ஆண்டுகள் பிரதமர் பதவியில் இருக்க முடிவு
செய்யப்பட்டது.
இந்நிலையில் வரும் மார்ச் 9-ல் நேபாள அதிபர்
தேர்தல் நடக்கிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் கூட்டணி கட்சியான
யு.எம்.எல்.எனப்படும் ஒருங்கிணைந்த மார்ச்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியைச்
சேர்ந்த அமைச்சர்கள் சிலர் இன்று தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் அளித்தனர்.
அமைச்சர்கள் ராஜினாமா செய்ததால், கூட்டணியில் முறிவு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.தற்போது
கூட்டணி 165 எம்.பி.,க்கள் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. சர்மா ஒலி
கட்சிக்கு 78 எம்.பி.,க்களும், பிரசண்டா கட்சிக்கு, 32 எம்.பி.,க்களும்
உள்ளனர்.
இதில் அதிபர் வேட்பாளராக நேபாள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரை தேர்வு செய்வதில் ஏற்பட்டுள்ள குழப்பமே காரணம் எனவும் கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement