மீண்டும் நீட் தேர்வு :
தமிழகம் முழுவதும் முதுநிலை நீட் நுழைவு தேர்வு வரும் மார்ச் மாதம்.5ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பம் முன்பதிவு ஜனவரி.7ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் இன்டர்ன்ஷிப் நிறைவு செய்யாத மாணவ, மாணவிகளால் தேர்வு எழுத முடியாது என்று அறிவிப்பு வெளியானது. இதனால் பல்வேறு அமைப்பினர் தொடர் கோரிக்கை வைத்ததையடுத்து ஜனவரி 14 தேதிக்கு பிறகு அவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு தேர்வு முகமை கூறியது.
ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் விண்ணபிக்கப்பட்ட தேர்வர்வாளர்களுக்கான தேர்வு மையங்கள் நிரம்பியதால் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு தமிழ் நாட்டிற்குள் தேர்வு மையங்கள் கிடைக்கவில்லை. இதுகுறித்து தமிழ்நாடு தேசிய முகமைக்கு புகார் கொடுத்த நிலையில், சென்னையில் கூடுதல் தேர்வு மையம் அமைக்கப்படும் என்று கூறிருந்தனர்.
அலைக்கழிக்கபடும் தமிழ் நாடு மாணவர்கள் :
இந்நிலையில் தேசிய தேர்வு முகமை கூடுதலாக விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதிக்கீடு செய்துள்ளது. இச்செய்தி மாணவ, மாணவிகளிடையே அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. தேர்வு மையங்களுக்கு செல்வதற்குகாகவே பல ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டிவரும் என்றும், விண்ணப்பித்தவர்களில் கர்பிணி பெண்களும் உள்ளார்கள் என மாணவர்கள் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.
மேலும் ஒதுக்கப்பட்டிருக்கும் தேர்வு மையங்களுக்கு விமானம் போக்குவரத்து வசதி கூட இல்லை என்று கூறுகின்றனர். நீட் தேர்வு என்பது பல லட்சம் மாணவர்களில் மருத்துவ கனவுகளை குறி வைக்கிறது. நீட் தேர்வு குறித்து பல்வேறு வழக்குகள் மருத்துவ கல்வியில் மாற்றம் தேவைப்படுகிறது என்பதை உணர்த்துகிறது. அநீதி இழைக்கப்படும் போதெல்லாம் நீதி மன்றம் தலையிடுவது அவசியம் என நீதிபதி சந்திர சூட் தெரிவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு தொடங்கிய நீட் தேர்வுக்கான போராட்டம் இன்னும் முடிந்தபாடில்லை.
தொடர் தற்கொலைகள் :
2020 ஆம் ஆண்டு ஒரே நாளில் மூன்று மாணவர்களில் தற்கொலை இந்திய ஊடகங்கள் வரை செய்தியாக மாறி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வின் காரணமாக தற்கொலைக்கு ஆளாக்கப்படுவது தொடர்ந்து நடந்துக்கொண்டே தான் இருக்கிறது. 2021 திமுக தேர்தல் பிரச்சார வாக்குறுதிகளில் முக்கியமாக இருந்தது நீட் தேர்வு விலக்கு தான்.
தேர்வு மையங்களை தமிழ் நாட்டிற்குள் ஒதிக்கீடு செய்வது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஏதேனும் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மாணவர்கள் மத்தியில் கூறி வருகின்றனர். மேலும் எதிர்கட்சிகள் தொடர்ந்து நீட் தேர்வு தொடர்பாக திமுக அரசின் மீது விமர்சனம் வைத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.