'இடது சிறுநீரகம் விற்பனைக்கு உள்ளது' பெங்களூரு இளைஞரின் போஸ்டர் வைரல்!


வாடகை வீட்டின் உரிமையாளர் கேட்கும் வைப்புத்தொகையை செலுத்த பணம் தேவைப்படுவதால், தனது இடது சிறுநீரகம் விற்பனைக்கு உள்ளதாக பெங்களூரூவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒட்டிய போஸ்டர் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

அதிகப்படியான டெபாசிட் தொகை

பெங்களூரில் வாடகைக்கு ஒரு வீட்டைப் பெறுவதற்கான அதிகப்படியான டெபாசிட் தொகை கேட்கப்படுவது இணையத்தில் பரபரப்பான தலைப்பாக மாறியது. பல சந்தை ஆய்வுகளின்படி, பெங்களூரு வீட்டு உரிமையாளர்கள் வாடகைக்கு குடியிருக்க வருபவர்களிடமிருந்து அதிக வாடகை மற்றும் டெபாசிட் பணத்தை கோருகின்றனர்.

தற்போது இந்த அவலத்தை சித்தரிக்கும் இளைஞர் ஒருவரின் கிண்டலான போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.

இளைஞனின் போஸ்டர்

ரம்யாக் ஜெயின் என்ற இணையவாசி கிண்டலான இந்தப் போஸ்டரைப் பகிர்ந்துள்ளார், அந்த போஸ்டரில், “இடது சிறுநீரகம் விற்பனைக்கு உள்ளது. வீட்டு உரிமையாளர்கள் கேட்கும் பாதுகாப்பு வைப்புத் தொகைக்கு நிதியளிக்க பணம் வேண்டும்.” என்று முதலில் எழுதப்பட்டிருந்தது.

அனால் அதற்கு கீழே, “சும்மா விளையாட்டுக்கு சொன்னேன், ஆனால் எனக்கு இந்திராநகரில் ஒரு வீடு வேண்டும், எனது சுயவிவரத்தை அறிந்துகொள்ள இதனை ஸ்கேன் செய்யவும்” என்று போஸ்டரில் கூறப்பட்டுள்ளது.

பலமுறை முயற்சித்தும், ஐடி நகரில் வாடகைக்கு இடம் கிடைக்காததால், ரம்யாக் இந்த கிண்டலான வழியைக் கண்டுபிடித்தார். இந்திராநகரில் ஒரு இடத்தைக் கண்டுபிடிப்பது கடினம், இந்த சுவரொட்டிகள் எனக்கு உதவும் என்று அவர் கூறினார்.

இந்த போஸ்டர்கள் பெங்களூரில் தங்குவதற்கு இடம் கிடைப்பதில் உள்ள சிரமம் குறித்து மீண்டும் ஒரு சூடான விவாதத்தை கிளப்பியுள்ளது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.