ஈரோடு இடைத்தேர்தல்! தற்போது வரை பதிவான வாக்கு விவரங்கள்!

Erode bypoll today: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் எம்எல்ஏ-வாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈ.வெ.ரா இறந்ததால் அந்த தொகுதியில் ஏற்பட்ட காலியிடத்தை தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்றைய தினம் (திங்கள்கிழமை) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.  திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் (கை சின்னம்) போட்டியிடுகிறார்.

 

 

வாக்காளர்களை அடைத்து வைத்து பரிசு பொருட்கள் வழங்குவதாக திமுகவினர் மீது அதிமுகவினர் புகார் கூறியதால் இரு தரப்பினரிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது.  ஈரோடு பெரியண்ண வீதி கலைமகள் வாக்குச்சாவடி மையத்தில் இன்று காலை முதல் விறுவிறுப்பான வாக்கு பதிவு நடைபெற்று வந்தது. இந்நிலையில் காலை 11 மணியளவில் வாக்குச்சாவடி மையம் அருகே திமுக மன்னர் வாக்காளர்களை அடைத்து வைத்து பரிசு பொருட்கள் வழங்குவதாக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி அதிமுக திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது திமுகவினர் இந்த பகுதிக்கு அதிமுகவினர் வரக்கூடாது இது எங்கள் குடும்பத்தினர் இருக்கிறார்கள் எனக்கூறினர்.   

இதனால் மேலும் மோதல் அதிகரித்தது உடனே வாக்குச்சாவடி மையம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர், தொடர்ந்து காவல்துறையினர் வாக்காளர்கள் அந்த பகுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்களா என சோதனையிலும் ஈடுபட்டனர்.  ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் 9 மணி நிலவரப்படி 10.10% வாக்குப்பதிவும், 10 மணி நிலவரப்படி 15 சதவீத வாக்குகளும், 11 மணி நிலவரப்படி 27.89% வாக்கு பதிவாகியுள்ளதாக சத்ய பிரத சாஹு தகவலை தெரிவித்துள்ளனர்.  கண்காணிப்பு கேமரா மூலமாக தேர்தல் நடப்பதை தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு ஆலோசனை மேற்கொண்டார்.

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.