ஈரோடு இடைத்தேர்தல்; 74.69 சதவிகித வாக்குகள் பதிவு.!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா காலமானதை தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 27ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
திமுக
கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஸ் இளங்கோவன் தொகுதியில் போட்டியிட்டார். அதேபோல் அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த் உள்ளிட்ட 77 பேர் போட்டியிட்டனர்.

இடைத் தேர்தலில் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் என திமுக களப்பணியாற்றியது. அதேபோல் அதிமுக சார்பில் கடுமையான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. களத்தில் 77 பேர் இருந்தாலும் திமுக மற்றும் அதிமுக கட்சிகளுக்கிடையே தான் கடுமையான போட்டி நிலவுகிறது. இந்தநிலையில் இன்று வாக்கு பதிவு நடைபெற்றது.

மக்கள் ஆர்வமுடன் வந்து தங்கள் வாக்குகளை செலுத்தினர். 77 வேட்பாளர்கள் களத்தில் இருந்ததால் 5 வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டு வாக்கு பதிவு நடைபெற்றது. இந்தநிலையில் மாலை 6 மணி நிலவரப்படி 74.69 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான சிவக்குமார் வாக்குப்பதிவு இறுதி கட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘‘ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் மாலை 7 மணி நிலவரப்படி, ஆண் வாக்காளர்கள் 82021, பெண் வாக்காளர்கள் 87907 மற்றவை 17 என மொத்தம் 1,69,945 வாக்குகள் பதிவாகியுள்ளன, இது 74.69 சதவீதம் ஆகும்.

தமிழகத்தில் வெறுப்பு அரசியலை செய்கிறது பாஜக – தொல். திருமாவளவன்

இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பாதுகாப்பு மற்றும் தேவையான அனைத்து வசதிகளுடன் சுமூகமாக நடைபெற்றது. தேர்தல் தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, மற்றபடி வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றுள்ளது.

முற்றிலுமாக வாக்குப்பதிவு முடிவடைந்து இரவு 12 மணிக்குள் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் வாக்கு என்னும் மையத்திற்கு கொண்டு செல்லப்படும். வாக்கு இயந்திரங்கள் வைக்கும் அறைக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, வேட்பாளர்கள் வரவு செலவு கணக்கு ஒரு மாதத்திற்குள் ஒப்படைக்க வேண்டும்’’ என அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.