'எங்க குடும்பத்துல சீக்கிரமா கல்யாணம் முடிச்சிடுவாங்க' – முதல்வர் ஸ்டாலின் ஓபன் டாக்…

காதலுக்கு நான் எதிர்ப்பே கிடையாது எனது இரண்டு பிள்ளைகளும் காதல் திருமணம்தான் செய்துகொண்டார்கள்… அவர்கள் இரண்டு பேரும் இரண்டு கண்கள் எனக்கு என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சியின் போது அளித்துள்ள பேட்டி சுவாரசியமாக உள்ளது.

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் முதல்வர் ஸ்டாலினை எடுத்துள்ள பேட்டியில் பல கேள்விகளுக்கு சுவாரசிய பதில்களை ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். கலைஞர் வசனத்தில் மறக்க முடியுமா என்ற படத்தின் பாடலான ”காகித ஓடம்… கடலலை மீது” எனக்கு மிகவும் பிடிக்கும்… அந்த படம் எடுக்கப்பட்ட விதம், பாடலில் உள்ள கருத்துக்கள் மிக அருமையானவை…

உதயநிதியா? செந்தாமரையா? இதில் யாரை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்ற கேட்டதற்கு… எனக்கு இரண்டு பேரும் இரண்டு கண்கள்தான்… இரண்டு பேரிடம் நான் எந்த வேறுபாடும் பார்ப்பதில்லை… அவர்கள் என்னை கேட்காமல் எதையுமே செய்ய மாட்டார்கள்… இருவருமே காதல் திருமணம்தான் செய்துகொண்டார்கள்… முதலில் என்னிடம்தான் வந்து சொன்னார்கள் பிறகு மனைவியுடன் கலந்து பேசி பார்த்து விசாரித்து இருவரது திருமணத்தையும் நடத்தினோம்… இப்போது அவர்கள் சந்தோசமாக உள்ளார்கள்…

கலைஞரை பற்றி… சின்ன வயதில் அவரது துடிப்பான செயல்பாடுகளை பார்த்து வியந்து போனேன்… வீட்டிற்கு எப்போது வருவார் எப்போது போவார் என்றே தெரியாது… சமூக பணியையே எப்போதும் கவனித்து கொண்டிருப்பார்… எப்போது சாப்பிடுவார் என்றுகூட கணிக்க முடியாது… ஆனால் அவர் இன்று இல்லை… அவரது கனவு திட்டங்களை நான் நிறைவேற்றி வருவதை அவர் பார்க்க இல்லையே என்ற வருத்தம் உள்ளது…

சர்ச் பார்க் பள்ளியில் என்னை சேர்க்க சென்றபோது ஸ்டாலின் என்ற பெயரை மாற்ற சொன்னார்கள்… ரஷ்யாவில் அப்போது போராட்டம் நிலவியதால் அந்த பெயரை மாற்றி வேறு பெயர் வைத்து சேர்க்க சொல்லியது பள்ளி நிர்வாகம்.. ஆனால், கலைஞரோ, பள்ளியை வேண்டுமானால் மாற்றுவேன் பெயரை மாற்ற மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டு எனது வீட்டருகே உள்ள அரசு பள்ளியில் சேர்த்தார்… ஆறாம் வகுப்பு வரை அங்கு படித்து பிறகு சென்னை எம்சிசி பள்ளியில் சேர்ந்தேன்…

வாழ்க்கையே வேகமாக ஓடிவிட்டது… படிக்கும்போது அரட்டை அடித்துக்கொண்டு சுற்றி வந்தேன்… திருமணம் நடத்த உடனே மிசா சட்டத்தில் கைது.. பிறகு அரசியல் என அனைத்தும் வேகமாக சென்று விட்டது….

எங்க குடும்பத்தில் எல்லாருக்கும் சீக்கிரமாகவே திருமணம் நடந்துவிடும்… எனக்கு 22 வயதில் திருமணம் நடந்தது.. அரசியல் குடும்பம் என்பதால் வரன் அவ்வளவு எளிதாக அமையவில்லை… என ஸ்டாலின் இவ்வாறு பகிர்ந்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.