எப்போ விழும்னு தெரியாது.! அரசு அலுவலகத்தில் எப்போதும் ஹெல்மெட் அணிந்து வேலை பார்க்கும் ஊழியர்கள்


இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு அலுவகத்தின் மேல் கூரை இப்பத்து இடிந்து விழுமோ என்ற பயத்தில் ஊழியர்கள் எப்போதும் ஹெல்மெட் அணிந்தபடியே வேலைபார்த்து வருகின்றார்.

உயிருக்கும் பணயம் வைத்து வேலைபார்க்கும் ஊழியர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

உத்தர பிரதேசத்தில் பாரவுத் நகரில் உள்ள மாநில மின் துறையின் கட்டிடம் பழுதடைந்துள்ளதால், பொறியாளர்கள், எழுத்தர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் என 40-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கட்டிடத்திற்குள் பணிபுரியும் போது ஹெல்மெட் அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

எப்போ விழும்னு தெரியாது.! அரசு அலுவலகத்தில் எப்போதும் ஹெல்மெட் அணிந்து வேலை பார்க்கும் ஊழியர்கள் | Viral Video Govt Staff Wearing Helmets Up OfficeTwiterScreenshot

வீடியோவில் கணினியை இயக்கம் ஊழியர் ஒருவர் “எப்போது மேற்கூரையிலிருந்து பிளாஸ்டர் விழுந்து காயமடையும் என்று தெரியாததால், எங்களை தற்காத்துக் கொள்ள ஹெல்மெட் அணிந்து வருகிறோம். கடந்த காலங்களில் தொழிலாளர்கள் காயம் அடைந்த சம்பவங்கள் நடந்துள்ளன. பெரிய விபத்து எதுவும் நடக்கவில்லை என்றாலும், ஆபத்து அதிகம்,” என்கிறார்.

“மழைக்காலத்தில் நிலைமை மோசமாகிறது, மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டு, மழைநீர் சொட்டிக்கொண்டே இருக்கிறது,” என்றனர்.

வார இறுதியில் தொழிலாளர்கள் ஹெல்மெட் அணிந்து பணிபுரியும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, இந்த விடயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது உயிருக்கு ஆபத்து என்கிற அளவில் தீவிரமான விடயம் என்றாலும், அலுவலகத்திற்குள் ஊழியர்கள் தலையில் ஹெல்மெட்டுடன் அமர்ந்திருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேடிக்கையாக பகிரப்பட்டு வருகிறது.
 

 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.