ஒரு ஆண், இரண்டு பெண்கள்., மூன்று வழி காதலால் அதிர்ஷ்டம்! லொட்டரியில் 48 கோடி பரிசு


ஒரு ஆணும் இரண்டு பெண்களும் ஒருவரை ஒருவர் காதலிக்கும் வித்தியாசமான காதலர்களுக்கு லாட்டரியில் ரூ.48 கோடி பரிசு விழுந்துள்ளது.

மூன்று பேருக்கு இடையில் காதல்

பொதுவாக காதலர்கள் என்றால் ஜோடி (Couple) அல்லது இரண்டு பேருக்கு மத்தியில் இருக்கும் உறவு என்பது அனைவரும் அறிந்திருப்பார்கள். ஆனால், மூன்று பேருக்கு இடையில் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி காதலிக்கும் உறவை ஆங்கிலத்தில் த்ரபிள் (Throuple) என அழைக்கின்றனர்.

அப்படிப்பட்ட உறவில் இருப்பவர்கள் தான் இந்த கேட்டி (Katy), ஜஸ்டின் (Justin) மற்றும் கிளாரி (Claire) எனும் மூன்று வழி காதலர்கள்.

ஒரு ஆண், இரண்டு பெண்கள்., மூன்று வழி காதலால் அதிர்ஷ்டம்! லொட்டரியில் 48 கோடி பரிசு | Throuple Lovers Won Lottery Katy Justin ClaireImage: mediadrumworld.com/@thrupples

20 வருட காதல்

41 வயதான ரியல் எஸ்டேட் தொலழிலாளியான கேட்டி ரப்பிள் (Katy Rupple) மற்றும் வாஷிங்டனைச் சேர்ந்த 39 வயதான நகைச்சுவை நடிகர் ஜஸ்டின் ரப்பிள் (Justin Rupple) இருவரும் சியாட்டிலில் ஜஸ்டினின் நகைச்சுவை நிகழ்ச்சிக்கு வெளியே சந்தித்தபோது காதலித்தனர்.

கேட்டி ஜஸ்டினிடம் தான் இருபாலினம் என்று ஒப்புக்கொண்டபோது அவர்கள் ஒன்றாக சேர்ந்து பத்து வருடங்கள் மகிழ்ச்சியான உறவில் வாழ்ந்தனர்.

கேட்டி ஜஸ்டினிடம் கல்லூரியிலிருந்து ஜஸ்டினின் தோழியான கிளாரி தோர்ன்ஹில் மீதான ஈர்ப்பைப் பற்றி ஜஸ்டினிடம் கூறினார்.

ஒரு ஆண், இரண்டு பெண்கள்., மூன்று வழி காதலால் அதிர்ஷ்டம்! லொட்டரியில் 48 கோடி பரிசு | Throuple Lovers Won Lottery Katy Justin ClaireImage: mediadrumworld.com/@thrupples

ஜஸ்டினும் கிளாரும் 2003-ல் சந்தித்தபோது கல்லூரியிலிருந்து நல்ல நண்பர்கள்.

கிளாரை அணுகிய பிறகு, கேட்டி மற்றும் ஜஸ்டின் சிறிது நேரம் எடுத்து கேட்டியின் மீதுள்ள ஈர்ப்பை கூறியுள்ளனர்.

கிளாருக்கும் இருவரையும் பிடித்துப்போக இந்தஅரிய வகை உறவுக்கு ஒப்புக்கொண்டு, அன்று முதல் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக த்ரபிள் காதலர்களாக ஒன்றாக கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸில் வாழுகின்றனர்.

ஒரு ஆண், இரண்டு பெண்கள்., மூன்று வழி காதலால் அதிர்ஷ்டம்! லொட்டரியில் 48 கோடி பரிசு | Throuple Lovers Won Lottery Katy Justin ClaireImage: mediadrumworld.com/@thrupples

அதிர்ஷடம்

“நாங்கள் ஒரு குழுவாக செயல்படும் இந்த உறவில் மகிழ்ச்சியாகவும், ஒருவருக்கொருவர் அன்பினால் உருவாக்கப்பட்ட ஒரு ஆதரவு அமைப்பு எங்களிடம் உள்ளது. நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்று நாங்கள் கருதுகிறோம்” என்று கூருகின்றனர்.

அவர்கள் உணர்வதைப் போலவே, உண்மையிலேயே அவர்களுக்கு அதிர்ஷடம் அடித்தது. அவர்களுக்கு லொட்டரியில் 1.1 மில்லியன் பவுண்டுகள் (இலங்கை பணமதிப்பில் ரூ.48 கோடி) வென்றனர்.

அவர்கள் மூன்று பேரும் இணைந்திருப்பதால் கிடைத்த அதிர்ஷடம் தான் இந்த லாட்டரி பரிசு என ஆழமாக நம்புகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.