காரடையான் நோன்பு: ஆயுள் அருளும் திருக்கடையூரில் மாங்கல்ய பலம் அளிக்கும் வழிபாடு; சங்கல்பியுங்கள்!

உங்கள் வாழ்வு வளம் பெறவும், ஆரோக்கியம் மேம்படவும், ஆயுள் விருத்தியாகவும் சக்தி விகடன் சிறப்பு சங்கல்ப பூஜைகளைத் திருக்கடையூரில் ஏற்பாடு செய்துள்ளது. சிறப்புமிக்க காரடையான் நோன்பு நாளில் (15-3-2023) காலை வேளையில் சிறப்பு சங்கல்பத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.

“ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்

பாசத்தில் அல்லல்பட இருந்தேனை, நின் பாதம் என்னும்

வாசக்கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டு கொண்ட

நேசத்தை என் சொல்லுவேன்? ஈசர்பாகத்து நேரிழையே!”

– அபிராமி அந்தாதி

அபிராமி அம்மன்

தீர்க்க ஆயுள் தரும் திருத்தலம் என்றால் அது திருக்கடையூர் தான். மார்க்கண்டேயருக்கு வரவிருந்த மரணத்தைத் தடுத்து அமிர்தகடேஸ்வரர் அருளிய தலமிது. அதேபோல தவறாக திதி சொன்னதற்காக மரண வாசலுக்குச் சென்ற அபிராமிபட்டரை அபிராமி அன்னை அருளி கடாக்ஷித்ததும் இங்குதான். மேலும் விநாயகருக்கான அறுபடை வீடுகளில் முதன்மையானது, அட்ட வீரட்ட தலங்களில் முதலானது, ஈசனுக்கு உகந்த பழைமையான வில்வம், அம்பாளுக்குப் பிரியமான சாதி மல்லிகை ஆகிய 2 ஸ்தல விருட்சங்களைக் கொண்ட க்ஷேத்திரம், முதன் முதலில் சங்காபிஷேகம் ஏற்பட்ட தலம் என திருக்கடவூருக்கு பல பெருமைகள் உள்ளன.

அமுதவாணர், அமிர்தலிங்கேஸ்வரர், அமுதகடோற்பவர், அமுத கடேசர், அமிர்தேஸ்வரர் என அநேக திருநாமங்கள் ஈசனுக்கு இங்கு உண்டு. வால்மீகி ராமாயணத்திலேயே கூறப்பட்ட கோயில் இது. ‘திருக்கடவூரில் யமனை ஈசன் அழித்தது போல, ராவணா… உன்னை நான் அழிப்பேன்’ என ராமன் உரைத்ததாக காவியம் கூறுகின்றது. ஆதாரச் சக்கரங்கள் ஆறை அடிப்படையாகக் கொண்டு காவிரிக் கரையில் ஆறு மந்த்ர சக்தி பீடங்களை ஸ்தாபித்துள்ளார்கள் சோழ மன்னர்கள். அவற்றில் சகஸ்ரார தலமாகத் திகழ்வது திருக்கடையூர் எனும் திருக்கடவூர்.

அமிர்தம் பெற்ற தேவர்கள் அதைப் பகிர்ந்துண்ட இடமே திருக்கடவூர். அசுரர்களிடம் இருந்து அமுதத்தைக் காக்க தேவர்கள் அதை நிலத்தடியில் புதைத்து வைத்தார்கள். நீராடிவிட்டு வந்து எடுத்தால் குடத்தை எடுக்க முடியவில்லை. பாதாளம் வரை குடம் ஊடுருவி நின்றது. பிறகு அந்த குடமே சுயம்புலிங்கமாக காட்சி தந்தது. அமிர்தக் கடத்திலிருந்து எழுந்தருளிய ஈசன் அமிர்தகடேஸ்வரர் என்றனார், அவருக்குத் துணையாக எழுந்தருளிய நாயகி அபிராமி என்றானார்.

அபூர்வமாக மேற்கு நோக்கி அருள்கிறார் அமிர்தகடேஸ்வரர். லிங்கத் திருமேனியில் காணப்படும் பாசக்கயிறு கட்டிய தழும்பு காலனை நினைவுப்படுத்தும். மார்க்கண்டேயர் லிங்கத்தைக் கட்டிக் கொண்டதால் ஏற்பட்ட அடையாளங்களையும் இன்றும் காணலாம்.

மரணமில்லா நிலையைத் தரும் தேவஅமிர்தமாகவே விளங்கும் அமிர்தகடேஸ்வரரை வணங்கினால், நீண்ட ஆயுளையும் வலிமையையும் செழுமையையும் அளிப்பார். அதனால்தான், மார்க்கண்டேயரும் இவரை வணங்கி வழிபட்டுச் சாகாவரம் பெற்றார்.

`திருக்கடையூர்’ அபிராமி

அபி என்றால் மேலான; ராமி என்றால் ரம்யமானவள். இங்கே அம்பிகை தனிக் கோயிலில் தனி கொடிமரம் கொண்டு எழுந்தருளி உள்ளார். கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். நான்கு திருக்கரங்களில் வலக் கீழ்க்கரத்தில் அபயம். இடக் கீழ்க்கரத்தில் வரஹஸ்தம். இடது மேல்கரத்தில் தாமரை மலர். வலது மேல்கரத்தில் ஜபமாலை. திருக்காதுகளில் ஒளிரும் சக்கரத் தாடங்கங்கள் ஒளி மிக்கவை. இந்த தாடங்கத்தைக் கழற்றிப் போட்டுத்தான் அபிராமி பட்டருக்காக நிலவை வரவழைத்தாள் என்று புராணங்கள் போற்றுகின்றன. இவள் அரசனுக்கு நிகரான போகங்களை தன் பக்தனுக்கு வழங்குபவள் என்றும் போற்றுகின்றன.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

அஷ்ட வீரட்டத் தலங்களில் ஒன்று திருக்கடவூர். இங்கு மார்க்கண்டேயரின் அன்புக்கும் பக்திக்கும் கட்டுப்பட்டு, யமனை சம்ஹாரம் செய்த காலசம்ஹார மூர்த்தியாக சிவம் எழுந்தருளி உள்ளார். இங்கு வந்து வழிபட்டாலே காலபயமும் தோஷ பயமும் நீங்கும் என்பார்கள். இங்கு வந்தே ஆயுள்ஹோமம், உக்ரரத சாந்தி, சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், அஷ்டம தசாபுக்தி பரிகாரம் போன்றவற்றைச் செய்வது அனைவரின் வழக்கம் என்று நீங்கள் அறிந்திருக்கலாம்.

கால சம்ஹார மூர்த்தி

இத்தனை சிறப்பு மிக்க திருத்தலத்தில் உங்கள் வாழ்வு வளம் பெறவும், ஆரோக்கியம் மேம்படவும், ஆயுள் விருத்தியாகவும் சக்தி விகடன் சிறப்பு சங்கல்ப பூஜைகளை ஏற்பாடு செய்துள்ளது. சிறப்புமிக்க காரடையான் நோன்பு நாளில் (15-3-2023) காலை வேளையில் சிறப்பு சங்கல்பத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.

மிக மிக அற்புதமான இந்தத் தலத்தில் நிகழும் மிக அரிதான இந்த வழிபாட்டில் நீங்களும் சங்கல்பித்துப் பிரார்த்திப்பதன் மூலம் அமிர்தகடேஸ்வரர் அருள் கைகூடும். அபிராமி அன்னையின் அருள் கடாட்சம் பெருகும். இதனால் சகல காரியங்களிலும் வெற்றி பெறலாம். காரிய ஸித்தி கிட்டும். கிரக தோஷங்கள், தீவினைகள் நீங்கும். தீரா கடன் பிரச்னைகளில் இருந்தும் விடுபடலாம். தீராத நோய்கள் தீரும், மனஅமைதி கிட்டும். ஓயாத உழைப்பால் சலிப்பு கொண்டோருக்கு அமைதியும் மகிழ்வும் அளிக்கும். குழந்தைப்பேறு உண்டாகும். விரயச் செலவுகள் நீங்கும். ஆரோக்கியம், ஆயுள், செல்வம், மணப்பேறு,பதவி உயர்வு, வேலை வாய்ப்பு உள்ளிட்ட சகல நன்மைகளும் கிட்டும். நிம்மதியான வாழ்வு கிட்டும். உறவுப் பிரச்னைகள் நீங்கும், சொந்தங்களின் பகை தீரும். சொத்து தொடர்பான தொல்லைகள் நீங்கும், கடன் தொல்லைகள் நீங்கும் என்பது ஐதீகம்.

ஹோமம்

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், பூஜை வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விபூதி மற்றும் குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி பூஜை வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, பூஜை வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, பூஜை-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.