காலநிலை மாநாட்டு தலைவருடன் அமைச்சர் நஸீர் அஹமட் சந்திப்பு


கோப் 28 மாநாட்டின் தலைவரும் காலநிலை மாநாட்டின் விசேட
பிரதிநிதியுமான சுல்தான் அல்ஜாபிரை, சுற்றாடல் அமைச்சர்
நஸீர் அஹமட் புதுடில்லியில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

புதுடில்லியில் நடைபெறும் நிலைபேறான அபிவிருத்தி மாநாட்டில் பங்கேற்றுள்ள
அமைச்சர் நஸீர் அஹமட், அங்கு வருகைதந்துள்ள முக்கிய தலைவர்கள் சிலரைத்
தனித்தனியாகச் சந்தித்துக் கலந்துரையாடி வருகிறார்.

இச்சந்திப்புக்களின் அடிப்படையிலேயே, காலநிலை மாற்றங்கள் குறித்த இக்கலந்துரையாடல் நடைபெற்றது.

இயற்கையின் மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புக்களில் அதிக சவால்களை இலங்கை எதிர்கொள்கிறது.

காலநிலை மாநாட்டு தலைவருடன் அமைச்சர் நஸீர் அஹமட் சந்திப்பு | Climate Conference In New Delhi

இலங்கையின் எதிர்பார்ப்பு

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் எதிர்கொள்ளும் காலநிலைமாற்றச் சவால்களிலிருந்து, மீண்டெழ ‘கோப்’ அமைப்பு ஆதரவளிப்பது அவசியம். அதிகளவான சவால்களை எதிர்நோக்கும் இலங்கை இதிலிருந்து மீண்டெழ முயற்சிக்கிறது.

இதற்கென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், அரசாங்கமும் விசேட செயற்றிட்டங் களை முன்மொழிந்துள்ளது.

இது, நடைமுறைப்படுத்துவது அவசியம். இதுவே, இலங்கையின் எதிர்பார்ப்பு.

இதுமாத்திரமன்றி, காலநிலை நீதிக்கான அமைப்பு ஒன்றை உருவாக்கி, இச்செயற்பாடுகளை
வினைத்திறனாக்கவும் முயற்சிக்கப்படுகிறது.

காலநிலைச் சவால்களால் திண்டாடும்
நாடுகளிலிருந்து இதற்கான அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படுவர். உயிரியல்
சேமிப்பு வங்கியை ஸ்தாபித்து, அவசரச் சவால்களைச் சமாளிப்பதற்கான முன்
ஆயத்தங்களும் செய்யப்படவுள்ளன.

காலநிலை மாநாட்டு தலைவருடன் அமைச்சர் நஸீர் அஹமட் சந்திப்பு | Climate Conference In New Delhi

முக்கிய கருப்பொருள்

நிதியைச் சேமித்தல், பச்சைக் கழிவு மற்றும் நீலக்கழிவுகளால் வெளியாகும்
மாசுகளைக் கட்டுப்படுத்தவும் இந்த உயிரியல் வங்கியூடாக ஏற்பாடுகள்
செய்யப்படவுள்ளதாக, அமைச்சர் நஸீர் அஹமட் தெளிவுபடுத்தியுள்ளார்.

இவற்றைச்
செவிமடுத்த சுல்தான்அல்ஜாபிர், இலங்கையின் முயற்சிகளைப் பாராட்டினார். கோப் 27
மாநாட்டு முன்மொழிவுகளை இலங்கையில் நடைமுறைப்படுத்த முன்னுரிமையளிக்கப்படும்
எனத் தெரிவித்துள்ளார்.

இது தவிர, 28 கோப் மாநாடு தனது தலைமையில் நடைபெறும்போது, தங்களது கோரிக்கைகளை
முக்கிய கருப்பொருளாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சுல்தான் அல்
ஜாபிர் உறுதியளித்துள்ளார்.

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு இம்மாநாடு டுபாயில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.