கூகுள் நிறுவனம் அதிரடி; ரோபோ க்கள் பணி நீக்கம்| Google is in action; Robots Finishing Jobs

வாஷிங்டன் : கூகுளின் தாய் நிறுவனமான, ‘ஆல்பாபெட்டில்’ ஊழியர்களைத் தொடர்ந்து, 100 ரோபோக்களின் பயன்பாடும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உலகில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களில் ஆள் குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டில், ஊழியர்களைத் தொடர்ந்து, 100 ரோபோக்களின் பயன்பாடும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் செலவைக் குறைக்கும் வகையில் உணவு விடுதி மேஜைகளை சுத்தம் செய்யவும், குப்பையைத் தனியாக பிரிக்கவும், கதவு களைத் திறந்து விடவும் பணியமர்த்தப்பட்ட ரோபோக்கள், பணி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பணி நீக்கம் செய்யப்பட்ட ரோபோக்களின் தொழில்நுட்பங்கள் வேறு பிரிவுகளில் பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.