பாகிஸ்தானில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரை குறி வைத்து பாகிஸ்தான் தலிபான் என்ற தீவிரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் போலீஸாருக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
நவீன துப்பாக்கிகள், ராக்கெட் லாஞ்சர்களை கையாளுதல், உயரமான கட்டடங்களிலிருந்து கயிறு கட்டி கீழே இறங்குதல், ஒரு கட்டடத்திலிருந்து மற்றொரு கட்டடத்திற்கு கயிறு மூலமாக செல்லுதல் உள்ளிட்ட பயிற்சிகள் பெண் கமாண்டோ படையினருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
தீவிரவாதிகளின் கொரில்லா தாக்குதலுக்கு உள்ளாகி வரும் கைபர் பக்துன்க்வா பகுதியிலுள்ள போலீசாருக்கு தற்போது சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.