நோய்கள் எத்தனை வகை: இன்று உலக அரிதான நோய் தினம்| How many types of diseases: Today is World Rare Disease Day

உலகில் 7000 விதமான அரிதான நோய்கள் உள்ளன. உலகில் 35 கோடி பேர், இந்தியாவில் 7 கோடி பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரிய நோயால் பாதிக்கப்பட்டவர், அவரது குடும்பங்களுக்கு சிகிச்சை உள்ளிட்ட உதவிகள் கிடைக்க வலியுறுத்தி பிப். 28ல் அரிதான நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அரிதான நோய் என்பதற்கு ஒவ்வொரு நாடுகளும் குறிப்பிட்ட தேவைக்கு ஏற்ப வரையறை செய்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.,) 2500 பேரில் ஒன்று அல்லது அதற்கும் குறைவான பாதிப்புடன் கூடிய பலவீனமான வாழ்நாள் நோய் என வரையறை செய்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.