புதுச்சேரியில் கேபிள் டி.வி.,க்கு கேளிக்கை வரி நிர்ணயம்: உள்ளாட்சித் துறை கோப்புக்கு கவர்னர் ஒப்புதல்| Entertainment Tax Fixing for Cable TV in Puducherry: Governor Approves Local Government File

புதுச்சேரி: புதுச்சேரி கேபிள் டி.வி., ஆபரேட்டர்கள் சந்தாதாரர்களிடம் வசூலிக்கும் மாதாந்திர சந்தாவில் 10 சதவீதம் கேளிக்கை வரியாக நகராட்சிக்கு செலுத்த வேண்டும்.

மேலும், 2 சதவீத சேவை வரியும், 1 சதவீத கல்வி வரியும் மின் கம்பங்களை கேபிள் டி.வி., ஒயருக்கு பயன்படுத்தினால் ஒரு கி.மீ., 34 ரூபாய் வரியாக செலுத்த வேண்டும். இவற்றை கேபிள் டிவி., ஆபரேட்டர்கள் முறையாக செலுத்தவில்லை. இதில் பல லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து வேறுவழியின்றி கேளிக்கை வரி செலுத்தாத கேபிள் டி.வி., ஆபரேட்டர்களின் கேபிள் இணைப்புகளை துண்டிக்கும் பணியை நகராட்சிகள் அதிரடியாகமேற்கொண்டன. இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்தாண்டு ஜனவரியில் அரசு, கேபிள் டி.வி., ஆபரேட்டர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியது. இதில் ஒவ்வொரு சந்தாவிற்கு 7.50 ரூபாய் கேளிக்கை வரி வசூலிக்க முடிவு செய்து, உள்ளாட்சி துறைவாயிலாக கோப்பு அனுப்பப்பட்டது. ஆனால் கேபிள் இணைப்புகள் எண்ணிக்கை தொடர்பாக கிடுக்கிபிடி கேள்வி எழுப்பிய நிதித்துறை ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்நிலையில், புதுச்சேரியில் கேபிள் டி.வி., இணைப்பின் ஒவ்வொரு சந்தாவிற்கும் 8 ரூபாய் கேளிக்கை வரி கட்டணம் நிர்ணயம் செய்ய உள்ளாட்சித் துறை தற்போது கோப்பு அனுப்பியது. இந்த கோப்பிற்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார். எனவே கேபிள் டி.வி., கேளிக்கை வரி நிர்ணயிக்கப்பட்டது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது.

latest tamil news

கணக்கீட்டில் குளறுபடி

புதுச்சேரி மாநிலத்தில் 3.5 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு ‘டிவி’ என்று கணக்கில் கொள்ளலாம். அப்படியெனில் 3 லட்சம் கேபிள் ‘டிவி’ இணைப்புகள் உள்ளது. உண்மை நிலை இப்படியிருக்க வெரும் 33 ஆயிரத்து 975 கேபிள் இணைப்பு மட்டுமே கேளிக்கை வரி செலுத்துவது மிகப்பெரிய மோசடி நடந்து வருகிறது.

ஒவ்வொரு வீட்டிற்கும் 250 முதல் 270 ரூபாய் வரை வசூல் செய்கின்றனர். இதனையும் கட்டாமல் மூடி மறைப்பதாகவும், இதன் மூலம் ஆண்டுக்கு 9 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வருகிறது.

தற்போது, கேபிள் டி.வி., டிஜிட்டல் மயமாக்கல் காரணமாக செட் ஆப் பாக்ஸ்கள் நிறுவப்பட்டுள்ளன. எனவே எம்.எஸ்.ஓ.,க்கள் வாயிலாக கேபிள் டி.வி., இணைப்புகளை துல்லியாக கணக்கெடுக்க உள்ளாட்சித் துறை திட்டமிட்டுள்ளது.

டி.டி.எச்., கணக்கில் வருமா?

கேபிள் டி.வி., செட்டாப் பாக்ஸ் பிரச்னை டி.டி.எச்., சேவையில் இணையும்போது இல்லை. எங்கு வாடகைக்கு சென்றாலும் செட்டாப் பாக்ஸ் மாற்ற தேவையில்லை. புதிதாகவும் வாங்க வேண்டியதில்லை.
இதன் காரணமாக புதுச்சேரியில் நிறைய பேர் டி.டி.எச். சேவைக்கு தாவி வருகின்றனர். ஆனால், புதுச்சேரியில் கேபிள் டி.வி., சந்தாதாரர்களுக்கு கேளிக்கை வரி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், டி.டி.எச்., இணைப்பிற்கு எந்த கேளிக்கை வரி இல்லாததால் புதுச்சேரி அரசுக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.டி.டி.எச்., சேவையும் கணக்கெடுத்து கேளிக்கை வரி விதிக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.