மனைவி மற்றும் மகன்களைக் குத்திக்கொன்ற நபர் தற்கொலை முயற்சி


டெல்லியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் கொரானா ஊரடங்கால் தன் தொழில் பாதிக்கப்பட்டதாகக் கூறி, மனைவி மற்றும் இரண்டு மகன்களைக் கத்தியால் குத்திக் கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழில்

டெல்லியின் மோகன் கார்டன் எனும் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்(38) என்பவர் தனியாக ஐஎஸ்ஓ தரச் சான்று வழங்கு நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.

அச்சமயம் வந்த கொரானா ஊரடங்கால் ராஜேஷின் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாது அவரிடம் வேலை செய்த ஊழியர்களே வாடிக்கையாளர்களை வேறு நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளனர். இதனால் பொருளாதார ரீதியாகப் பெரிதும் பாதிக்கப்பட்டு அதிக கடன் வாங்கியுள்ளார்.

ஏமாற்றிய ஊழியர்கள்

கடன் தொல்லை நாளுக்கு நாள் அவருக்கு அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது.இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ராஜேஷ், தனது நண்பர்களுக்கு வாட்சாபில் “நான் கடும் கடன் சுமையில் இருக்கிறேன்.

கோவிட் லாக்டவுன் காலத்தில் எனது தொழில் பெரும் பாதிப்பு கண்டது. எனது ஊழியர்கள் என்னை ஏமாற்றி வாடிக்கையாளர்களைப் போட்டி நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

பல பேரின் மோசடியால் கடும் பண நெருக்கடிக்கு ஆளாகியுள்ளேன்” என நீண்ட பதிவை எழுதி குறுஞ்செய்தியாக அனுப்பியிருக்கிறார்.

மனைவி, மகன்களை கொன்ற ராஜேஷ்

தனது மனைவி உட்பட 5 வயது மகன் மற்றும் 4 மாத குழந்தையைக் கத்தியால் குத்திக் கொன்று விட்டு, தானும் தனது மணிக்கட்டை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

ராஜேஷின் நண்பர்கள் அவரது வீட்டிற்கு வந்து பார்க்கையில் ராஜேஷ் உயிருக்குப் போராடிய நிலையிலிருந்திருக்கிறார்.

மனைவி மற்றும் மகன்களைக் குத்திக்கொன்ற நபர் தற்கொலை முயற்சி | Man Kills His Family For Losses His Business@Ani

உடனே அவரது நண்பர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க,  தற்போது அவர்  சிகிச்சை பெற்று வருகிறார்.

தனக்கு இவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது என ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தார் யாரிடமும் கூறியதில்லையென அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருத்தத்தோடு கூறியுள்ளனர். டெல்லி காவல்துறை இச்சம்வத்தைப் பற்றி விசாரணையை துவங்கியுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.