மயக்கமடைந்த என் மனைவியைப் பார்த்து நான் அழுகிறேன்- சென்னை விமான நிலையத்தில் நடந்த சம்பவத்தைப் பகிர்ந்த வாசிம் அக்ரம்


சென்னை விமான நிலையத்தில் கிரிக்கெட் வீரர் வாசீம் அக்ரமின் மனைவி மயக்கமடைந்த போது நடந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை அவரது சுயசரிதை நூலைப்பற்றிய விவாதத்தின் போது நினைவு கூர்ந்துள்ளார்.

வாசிம் அக்ரமின் சுய சரிதை நூல்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசீம் அக்ரம் தனது சுயசரிதை புத்தகத்தைப் பற்றிய விவாதத்தின் போது சென்னை விமான நிலையத்தில் நடந்த மறக்க முடியாத சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார்.

மயக்கமடைந்த என் மனைவியைப் பார்த்து நான் அழுகிறேன்- சென்னை விமான நிலையத்தில் நடந்த சம்பவத்தைப் பகிர்ந்த வாசிம் அக்ரம் | Wasim Akram Shares His Memorable Moments Chennai@propakistani

இது பற்றிப் பேசியவர் அக்டோபர் 2009ஆம் ஆண்டு அக்டோபர் 2009 ஆம் ஆண்டு நான் என் மறைந்த மனைவியுடன் சிங்கப்பூருக்குச் சென்று கொண்டிருந்தேன்.

எரிபொருள் நிரப்புவதற்காகச் சென்னையில் விமானம் தரையிறங்கியது. எனது மனைவி திடீரென மயக்கமடைந்தாள், நான் என்ன செய்வதெனத் தெரியாமல் அழுகிறேன்.

எங்களிடம் இந்திய விசா இல்லை. இருவரிடமும் பாகிஸ்தான் பாஸ்போர்ட்ஸ் மட்டும் இருந்தது. இருந்தாலும் அங்கு இருந்தவர்கள் என்னை விமான நிலையத்தில் அங்கீகரித்தனர்.

உதவிய அதிகாரிகள்

சென்னை விமான நிலையத்திலிருந்த அதிகாரிகள் பாதுகாப்பைப் பற்றி கவலைப் பட வேண்டாம் என அவரது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தை கிரிக்கெட் வீரராகவும், சக மனிதனாகவும் என்னால் மறக்கவே முடியாது என வாசிம் அக்ரம் நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.

அச்சம்பவம் நடந்த சில தினங்களுக்குப் பின்பு அவரது மனைவி சென்னை அப்போலோ மருத்துவமனையில் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

மயக்கமடைந்த என் மனைவியைப் பார்த்து நான் அழுகிறேன்- சென்னை விமான நிலையத்தில் நடந்த சம்பவத்தைப் பகிர்ந்த வாசிம் அக்ரம் | Wasim Akram Shares His Memorable Moments Chennai@Getty/Reuters/HT Collage

மேலும் அவர் 1991 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியைப் பற்றிப் பேசியவர் பாகிஸ்தான் அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான சக்லைன் முஷ்தாக் வீசும் துஸ்ரா பந்துவீச்சை யாராலும் எதிர்கொள்ள முடியாது.

ஆனால் சச்சின் இரண்டாவது இன்னிங்ஸிலே கீப்பருக்கு பின்புமாகச் சென்று சிறப்பாக பேட்டிங் செய்தார். அதனால் தான் சச்சின் உலகத்தின் சிறந்த பேட்ஸ்மேன திகழ்கிறார் எனப் புகழ்ந்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.