25 கோடி வசூல் செய்த சிவகார்த்திகேயன் :
2013 ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன்- இயக்குனர் துரை செந்தில்குமார் கூட்டணியில் வெளியான எதிர்நீச்சல் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் 2013 ஆம் ஆண்டிலே 25 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. வளர்ந்து வரும் நாட்களிலே பந்தய குதிரையாக சிவகார்த்திகேயன் மாறி வருகிறார் என தயாரிப்பாளர்கள் முதல் சினிமா விமர்சகர்கள் வரை அனைவரும் கூறி வந்தனர்.
மீண்டும் இணைந்த வெற்றிகூட்டணி :
இவ்வாறு வெற்றிபெற்ற இந்த வெற்றிகூட்டணி அடுத்த இணைந்த திரைப்படம் தான் ‘’காக்கி சாட்டை’’. காக்கி சட்டை திரைப்படத்தை பொறுத்தவரை இன்று வரை சிவகார்த்திகேயன் திரைவாழ்வில் முக்கியமான ஒரு திரைப்படமாக இருந்து வருகிறது. காரணம் நடிகர், தயாரிப்பாளர் தனுஷ்- சிவகார்த்திகேயன் கூட்டணியில் கடைசியாக வந்த திரைப்படம் தான் காக்கி சட்டை. மேலும் இத்திரைபடத்திற்கு பிறகு தான் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள் என்பது போன்ற செய்திகள் ஊடகங்களில் வந்துகொண்டிருந்தன. மேலும் அதுவரை சிவகார்த்திகேயனை ஜனரஞ்சகமாக பார்த்த ரசிகர்களுக்கு காக்கி சட்டை திரைப்படம் முதல் ஆக்ஷன் ஹீரோவாக மாறினார்.
Vijay, Leo: அச்சச்சோ… இப்படி வேற கிளப்பிவிடுறாங்களே… பீதியில் விஜய் ரசிகர்கள்!
அதற்கு முன்பு வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தபடாத வாலிபர் சங்கம் போன்ற திரைப்படங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கு பிடித்த ஒரு திரைப்படமாக இருந்தது. ஆனால் காக்கி சட்டை திரைப்படத்தை பொறுத்தவரை இத்திரைப்படத்தின் கதை ஏற்கனவே விஜயகாந்த்- ஆர்.கே.செல்வமணி கூட்டணியில் வெளியான புலன்விசாரணை திரைப்படத்தின் கதை என்று பலரும் விமர்சனம் செய்து வந்தனர்.
மேலும் திரைக்கதையை இன்னும் சுவாரஸ்யமாக அமைத்திருந்தால் கண்டிப்பாக ஒரு மாபெரும் வெற்றி திரைப்படமாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் பலர் கூறி வந்தனர். ஆனால் விமர்சனங்கள் பல இருந்தாலும் வசூல் ரீதியாக அதற்கு முன்பு சிவகார்த்திகேயனுக்கு வெளியான மான் கராத்தே திரைப்படத்தின் வசூலை தாண்டிய வசூலாக அமைந்தது. அந்த வகையில் காக்கி சட்டை திரைப்படம் வசூல் ரீதியாக தயாரிப்பாளருக்கு லாபமான ஒரு திரைப்படமாகவே அமைந்தது என்று சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார்.
Naga Chaitanya: சமந்தாவின் காதலை மறக்காத நாக சைதன்யா: என்ன செஞ்சிருக்கார்னு பாருங்க
8 ஆண்டுகளை நிறைவு செய்த காக்கி சட்டை:
மேலும் காக்கி சட்டை திரைப்படத்தின் வசூல் ரீதியான வெற்றி சிவகார்த்திகேயனுக்கு அடுத்து வெளியான ரஜினி முருகன் திரைப்படத்திற்கும் நல்ல வரவேற்பை கொடுத்தது. இவ்வாறு திரைப்படம் உருவாகும் போதும் சரி, திரைப்படம் வெளியான பிறகும் சரி பல சுவாரஸ்ய நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு தான் காக்கி சட்டை திரைப்படம் வெளியானது.
இன்றுடன் காக்கி சட்டை திரைப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவாகியுள்ளது. மீண்டும் தனுஷ்-சிவகார்த்திகேயன் கூட்டணி எப்போது..? அல்லது இருவரும் சேர்ந்து நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா..! என இன்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் வழியாகவும், ரசிகர்களில் கலந்துரையாடல் வழியாகவும் கேட்டுக்கொண்டே தான் உள்ளார்கள்.