முதல் திரைப்படம் வெளியாகும் முன்பே அறிமுக இயக்குநர் மரணம்


முதல் திரைப்படம் வெளியாகும் சில நாட்களுக்கு முன்பே இளம் அறிமுக இயக்குநர் உயிரிழந்த சம்பவம் மலையாள திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இளம் இயக்குநர் மரணம்

மலையாள திரைப்பட இயக்குநர் ஜோசப் மனு ஜேம்ஸ் (Joseph Manu James) இப்போது உயிருடன் இல்லை. அவர் ஹெபடைடிஸ் நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், பிப்ரவரி 24 அன்று துரதிர்ஷ்டவசமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு வயது 31.

அவர் தனது முதல் படமான ‘நான்சி ராணி’ வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.

முதல் திரைப்படம் வெளியாகும் முன்பே அறிமுக இயக்குநர் மரணம் | Malayalam Director Joseph Manu James Passed AwayInstagram @Ajuvarghese

நடிகர்கள் இரங்கல்

‘நான்சி ராணி’ படத்தில் ஜோசப் மனு ஜேம்ஸுடன் பணியாற்றிய நடிகர் அஜு வர்கீஸ், அவரது அகால மரணம் குறித்து அறிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜோசப் மனுவின் புகைப்படத்துடன் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

ஜோசப் மனு ஜேம்ஸின் முதல் படத்தில் நடித்த இளம் நடிகை அஹானா கிருஷ்ணாவும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இரங்கலை எழுதினார்.

ஜோசப் மனு ஜேம்ஸ் குழந்தை நட்சத்திரமான சினிமா துறையில் அறிமுகமானார். 2004-ல் சாபு ஜேம்ஸ் இயக்கிய ‘ஐ ஆம் க்யூரியஸ்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். ஜோசப் மனு ஜேம்ஸ் மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி திரைப்படத் துறையில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். அவரது இறுதிச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.