லியோனல் மெஸ்ஸியின் (Lionel Messi) உதவியுடன் கைலியின் எம்பாப்பே (Kylian Mbappe) PSG அணிக்காக அடித்த கோலை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.
மெஸ்ஸி-எம்பாப்பே காம்போ
திங்கட்கிழமை வெலோட்ரோமில் நடந்த லீக் 1 போட்டியில், பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் (PSG) அணி 3-0 என்ற கோல் கணக்கில் மார்சேயை (Marseille) தோற்கடித்தது.
PSG அணியின் இந்த அசத்தலான வெற்றியையும் தாண்டி, போட்டியில் மெஸ்ஸியின் உதவியுடன் எம்பாப்பே அடித்த கோலை ரசிகர்கள் பாராட்டிவருகின்றனர். இருவரின் இந்த காம்போ பார்க்க அருமையாக இருப்பதாக கூறிவருகின்றனர்.
NICOLAS TUCAT
இப்போட்டியில், கைலியன் எம்பாப்பே 25 மற்றும் 55-வது நிமிடங்களில் மொத்தம் இரண்டு கோல்களை அடித்தார், மெஸ்ஸி 29-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
எம்பாப்பே அடித்த இரண்டு கோல்களும் மெஸ்ஸியால் அஸ்சிஸ்ட் செய்யப்பட்டது. அதேபோல், மெஸ்ஸி அடித்த கோல் எம்பாப்பேவால் அஸ்சிஸ்ட் செய்யப்பட்டதாகும்.
I love to see this Mbappe Messi duo
— Didi (@LeoPrime10i) February 27, 2023
That Hug from Mbappe to Messi. 🥹🐐#Messi𓃵 #mbappe #GOAT𓃵 #GOAT #messibacktobarca pic.twitter.com/UjGQfaWReD
— EduFCB (@barcaarounds) February 19, 2023
200 கோல்களுடன் முதலிடம்
இந்த 2-வது கோலை அடித்ததன்மூலம் எம்பாப்பே PSG அணிக்காக அதிகபட்சமாக 200 கோலை அடித்த வீரர் என்ற சாதனையுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஆனால், ஏற்கெனவே PSG அணியில் 200 கோல்களை உருகுவே வீரர் Edinson Cavani அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருவரும் முதலிடத்தை பகிர்ந்துகொண்டுள்ளனர். இன்னும் ஒரு கோல் அடித்தாலும், இன்னும் சில காலத்திற்கு எம்பாப்பே மட்டுமே முன்னிலை வகிப்பார்.
Twitter@ESPNFC
PSG-ன் அதிக கோல் பட்டியலில் Zlatan Ibrahimovic 156 கோல்களுடன் மூன்றாவது இடத்திலும், நெய்மர் 118 கோல்களுடன் நான்காவதுஇடத்திலும் உள்ளார்.