புதுடெல்லி,
மேகாலயா, நாகாலாந்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். மூத்த வாக்காளர்களும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.
இந்த நிலையில், மேகாலயா, நாகாலாந்து தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களித்து புதிய சாதனை படைத்திட வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
“மேகாலயா, நாகாலாந்து மக்கள் தவறாமல் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள். முதல்முறை வாக்காளர்கள், இளைஞர்கள் அனைவரும் அதிக எண்ணிக்கையில் வாக்களித்து புதிய சாதனையை படைத்திடுக” எனவும் கூறியுள்ளார்.