மேனகா நவநீதன்: ஈரோடு கிழக்கில் முந்தும் நாம் தமிழர் கட்சி… பளீச் தகவல்!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். பிற்பகலில் வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் அதற்கு முன்னதாக வாக்களித்து விட வேண்டும் என மும்முரம் காட்டி வருகின்றனர்.

மேனகா நவநீதன் வாக்களித்தார்

18 வயதுக்கு மேற்பட்ட பலரும் ஆர்வத்துடன் வாக்களிக்க வருகை புரிகின்றனர். வயதானவர்களும் உரிய துணையுடன் வந்து வாக்களித்து வருவதை பார்க்க முடிந்தது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் காலை 7 மணிக்கே வந்து வரிசையில் நின்று தனது வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு மாற்றம் ஏற்படுத்த வேண்டும்.

வெற்றி வாய்ப்பு எப்படி?

அதை நாம் செய்ய வேண்டும். அந்த மாற்றத்தை ஏற்படுத்த என் அன்பு மக்கள் பெரு மகிழ்ச்சியுடன் கிளம்பி வர வேண்டும். வீதிகளில் இறங்கி போராடுவதை தவிர்க்க வீடுகளில் இருந்து வாக்களிக்க வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். மேலும் பேசுகையில், வெற்றி வாய்ப்புகள் நன்றாக இருக்கின்றன. மக்கள் ஆர்வமாக இருப்பதை பார்க்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது.

தேர்தல் ஏற்பாடுகள்

தேர்தல் ஆணையம், காவல்துறை உள்ளிட்டோர் நல்ல முறையில் ஏற்பாடுகளை செய்துள்ளனர். நான் நேரில் பார்த்தேன். மகிழ்ச்சியாக இருக்கிறது. மிகவும் கண்டிப்பான முறையில் நடந்து கொள்கின்றனர். இந்த கட்டுப்பாடுகள் அப்படியே தொடர வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார். முன்னதாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கிருஷ்ணனுன்னி வாக்களித்தார்.

மாவட்ட ஆட்சியர் தகவல்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வெயில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் வாக்குச் சாவடிகளில் பந்தல் போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களில் எந்தவித பிரச்சினையும் இல்லை. அதற்கேற்ப உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று கூறினார்.

மொத்தம் 77 பேர்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மேனகா நவநீதனை தவிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த் மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். இதனால் 5 வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.

வாக்கு எண்ணிக்கை

போலீசார், துணை ராணுவப் படையினர் என பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சீல் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும். இதையடுத்து வரும் மார்ச் 2ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் போது அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் திறக்கப்படும். அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.