மோசடி வழக்கில் ஹரி நாடாரை மீண்டும் கைது செய்தது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்..!

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இருந்து வரும் ஹரி நாடாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர். கடந்த 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் நாடார் சமுதாயம் சார்பாக,  சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு 37,726 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தவரும், தமிழகத்தில் சுயேட்சை வேட்பாளர்களில் அதிக அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்த வேட்பாளருமான ஹரி நாடாரை பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2021 மே மாதம் ஒரு குற்ற வழக்கில் கைது செய்து பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைத்தனர்.

அப்போதே கேரளாவைச் சேர்ந்த இஸ்மாயில் பரக்கத் என்ற தொழிலதிபர் ஹரி நாடார் மீது மோசடி புகார் ஒன்றை தமிழக  காவல்துறையினரிடம் வழங்கியிருந்தார். அவர் புகார் அளித்து 22 மாதங்கள் ஆகியுள்ள இந்நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB)ஆய்வாளர் பிரசித் தீபா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் கடந்த 22 மாதங்களாக விசாரணை சிறைவாசியாக இருந்து வரும் ஹரி நாடாரை இன்று காலை 11.15 மணி அளவில் கைது செய்தார்கள்.

இன்னும் ஓரிரு தினங்களில் ஹரி நாடாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஆய்வாளர் பிரசித் தீபா தலைமையில் சென்னை எழும்பூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு சம்பந்தப்பட்ட வழக்குகள் நடைபெறும் நீதிமன்றத்தில், நீதி அரசர் முன்னிலையில் ஆஜர் படுத்த இருக்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.