யாழ். போதனா வைத்தியசாலை காவலாளி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சித்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறை பக்கம்
உள்ள நுழைவாயிலுக்கு அருகில் பட்டா வாகனத்தில் வந்த சிலர் கதவால் ஏறி குதித்து
வைத்தியசாலைக்குள் நுழைய முற்சித்துள்ளனர்.
காவலாளியை வெட்ட முயற்சி
இதனை அவதானித்த வைத்தியசாலை காவலாளி அவர்களை தடுக்க முயன்ற போது, அவர்கள் வந்த பட்டா வாகனத்திலிருந்து வாளை
எடுத்து காவலாளியை வெட்ட முயற்சித்ததுள்ளனா்.
இதனையடுத்து சுதாகரித்துக் கொண்ட
காவலாளி அவர்களை தடுக்க முயன்ற போது, அங்கிருந்த கதிரை, மேசை போன்றவற்றை குறித்த வன்முறை கும்பல் வாளால் வெட்டி சேதப்படுத்தியதுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
இந்நிலையில் சம்பவம்
தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.