ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் 3 இடைநிலை ஆசிரியர்கள் அரசிடமிருந்து மொத்தம் 63 லட்சம் ரூபாய் வீட்டுக்கடன் வாங்கி, வீடுகட்டாமலே கடனுக்கான வட்டியில் வருமானவரிச்சலுகை பெற்று ஏமாற்றியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவர்கள் திருவள்ளுவர் மாவட்டத்தில் வீடு கட்டியதாகவும், அதை வட்டார கல்வி அலுவலர் பார்வையிட்டதாகவும், சான்றிதழ் பெற்றுள்ளனர்.
இவர்கள் வீடு கட்டவில்லை என முதல்வரின் தனிப்பிரிவிற்கு வந்த புகாரின் பேரில், மீசரகண்டபுரம் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டு, அவர்கள் மூவரும் வீடு கட்டவில்லை என அறிக்கை சமர்ப்பித்த நிலையில், இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் கடன் பெற்று முதன்முறையாக வீடு கட்டுவோருக்கு மத்திய அரசு வழங்கும் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் சலுகையையும் இவர்கள் பெற்றதாக கூறப்படுகிறது.