43 ரயில்கள் ரத்து… பட்டியல் இதோ!!

மதுரை திருப்பரங்குன்றம் – திருமங்கலம் இடையே இரட்டை ரயில் பாதை பணி நடக்க உள்ளதால், 43 ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பில், கேரள மாநிலம் பாலக்காடு – திருச்செந்துார் அதிகாலை, 5:30 மணி ரயில், ராமேஸ்வரம் – மதுரை அதிகாலை, 5:40 மணி முன்பதிவு இல்லாத ரயில், மதுரை – தேனி காலை, 8:05 மணி ரயில் ஆகியவை மார்ச் 1 முதல் 7ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன.

தேனி – மதுரை மாலை, 6:15 மணி ரயில், மதுரை – செங்கோட்டை காலை, 11:30 மணி ரயில், செங்கோட்டை – மதுரை காலை, 11:50 மணி முன்பதிவு இல்லாத ரயில் மார்ச் 1 முதல் 7ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன.

திருச்செந்துார் – பாலக்காடு மதியம், 12:05 மணி ரயில், மதுரை – ராமேஸ்வரம் காலை, 6:50 மணி முன்பதிவு இல்லா ரயில், மதுரை – ராமேஸ்வரம் மதியம், 12:30 மணி முன்பதிவு இல்லாத ரயில், ராமேஸ்வரம் – மதுரை காலை 11:00 மணி ரயில் ஆகியவை மார்ச் 1 முதல், 6ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன

மதுரை – ராமேஸ்வரம் மாலை 6:10 மணி ரயில், ராமேஸ்வரம் – மதுரை மாலை, 6:00 மணி ரயில், திண்டுக்கல் – மதுரை காலை, 8:00 மணி ரயில், மதுரை – திண்டுக்கல் மாலை, 6:10 மணி ரயில், செங்கோட்டை – திருநெல்வேலி காலை, 10:05 மணி ரயில், திருநெல்வேலி – செங்கோட்டை மதியம், 1:50 மணி முன்பதிவு இல்லாத ரயில்கள், மார்ச் 1 முதல், 6ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன.

சென்னை எழும்பூர் – காரைக்குடி மாலை, 3:45 மணி பல்லவன் விரைவு ரயில், எழும்பூர் – மதுரை இரவு, 10:05 வாராந்திர ரயில், மார்ச் 1 முதல் மார்ச், 3 வரை ரத்து செய்யப்படுகின்றன. காரைக்குடி – எழும்பூர் காலை, 5:35 மணி பல்லவன் விரைவு ரயில் மார்ச், 1, 3, 4ஆம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

கோவை – நாகர்கோவில் இரவு, 7:30 மணி விரைவு ரயில், நாளை (28ஆம் தேதி) ரத்து செய்யப்படுகிறது. ஈரோடு – திருநெல்வேலி மதியம், 1:35 மணி ரயில், ராமேஸ்வரம் – கன்னியாகுமரி இரவு 9:00 மணி ரயில்கள், மார்ச் 1, 4ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகின்றன.

கன்னியாகுமரி – ராமேஸ்வரம் இரவு, 10:15 மணி ரயில், மார்ச் 2, 5ஆம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. திருச்செந்துார் – திருநெல்வேலி காலை, 10:15 மணி சிறப்பு ரயில், திருநெல்வேலி – திருச்செந்துார் மாலை, 4:06 மணி சிறப்பு ரயில், நாகர்கோவில் – கோவை இரவு 9:45 மணி ரயில், மார்ச் 1, 2, 3ஆம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

மதுரை – எழும்பூர் இரவு, 8:50 மணி ரயில், ராமேஸ்வரம் – திருப்பதி மாலை, 4:20 மணி வாராந்திர ரயில் ஆகியவை, மார்ச் 2ஆம் தேதியும், திருப்பதி – ராமேஸ்வரம் காலை, 11:55 மணி வாராந்திர ரயில் மார்ச், 3ஆம் தேதியும் ரத்து செய்யப்படுகின்றன.

சென்ட்ரல் – மதுரை இரவு, 10:30 மணி விரைவு ரயில், மார்ச் 1, 3ஆம் தேதிகளிலும்; மதுரை – சென்ட்ரல் இரவு, 10:50 மணி ரயில், மார்ச் 2, 5ஆம் தேதிகளிலும் ரத்து செய்யப்படுகின்றன. திருச்சி – திருவனந்தபுரம் காலை, 7:20 மணி ரயில், திருவனந்தபுரம் – திருச்சி காலை 11:35 மணி ரயில் மார்ச் 2, 3ஆம் தேதிகளில் ரத்து செய்யப்படுகின்றன.

கோவை – நாகர்கோவில் இரவு 7:30 மணி ரயில், எஸ்.எம்.வி.டி., பெங்களூரு – நாகர்கோவில் மாலை, 5:15 மணி ரயில், மார்ச் 1, 2ம் தேதிகளிலும்; திருநெல்வேலி – ஈரோடு காலை, 6:15 மணி ரயில், மார்ச் 2, 3, 4, 5ஆம் தேதிகளிலும் ரத்து செய்யப்படுகின்றன.

நாகர்கோவில் – தாம்பரம் மாலை, 4:15 மணி வாராந்திர ரயில், எழும்பூர் – நாகர்கோவில் மாலை, 6:55 மணி வாராந்திர ரயில், மார்ச் 2ஆம் தேதியிலும், நாகர்கோவில் – எஸ்.எம்.வி.டி., பெங்களூரு இரவு, 7:15 மணி ரயில், மார்ச் 2, 3ஆம் தேதிகளிலும் ரத்து செய்யப்படுகின்றன.

தாம்பரம் – நாகர்கோவில் இரவு 7.30 மணி வாராந்திர ரயில், மார்ச்1ஆம் தேதியும், நாகர்கோவில் – எழும்பூர் மாலை 4.15 மணி வாராந்திர ரயில் மார்ச் 3ஆம் தேதியும் ரத்து செய்யப்படுகின்றன. அதே போல், மதுரை – கோவை காலை 7.25 மணி ரயில், மதுரை – விழுப்புரம் அதிகாலை 4.05 மணி ரயில் மார்ச் 6ஆம் தேதியும் ரத்து செய்யப்படுகின்றன.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.