Erode Election: இன்று வாக்குப்பதிவு! ஈரோடு இடைத்தேர்தல் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்!

Erode bypoll today: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் எம்எல்ஏ-வாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈ.வெ.ரா இறந்ததால் அந்த தொகுதியில் ஏற்பட்ட காலியிடத்தை தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்றைய தினம் (திங்கள்கிழமை) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.  திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் (கை சின்னம்) போட்டியிடுகிறார்.

திமுக-வை எதிர்த்து அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு (இரண்டு இலை சின்னம்) போட்டியிடுகிறார்.  இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளைத் தவிர, நாம் தமிழர் கட்சி (என்டிகே) மேனகா நவநீதன் (கரும்பு விவசாயி), தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் எஸ் ஆனந்த் (முரசு சின்னம்) ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.  கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் (எம்என்எம்) மற்றும் ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவை முறையே காங்கிரஸுக்கும், அதிமுகவுக்கும் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளன.  தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என டாக்டர் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சியும், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் (AMMK) அறிவித்துள்ளது.  இந்த இடைத்தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட 77 வேட்பாளர்களில் 47 பேர் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர்.

இடைத்தேர்தல் குறித்து தேர்தல் அதிகாரி கே.எஸ்.சிவக்குமார் கூறுகையில், 2.26 லட்சம் வாக்காளர்கள் வசதியாக வாக்களிக்கும் வகையில் அவர்களுக்கு போதுமான அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இந்த தேர்தல் பணியில் சுமார் 2,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  மொத்தமுள்ள 238 வாக்குச் சாவடிகளில் 32 வாக்குச் சாவடிகள் பதட்டமான சூழ்நிலையில் இருக்கும் என அடையாளம் காணப்பட்டு இருப்பதால் அங்கு பிரச்சனை எதுவும் ஏற்படும் பட்சத்தில் கூடுதல் துணை ராணுவப் பணியாளர்கள் அங்கு குவிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.  வாக்கெடுப்பு செயல்முறை வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டு, மைக்ரோ-அப்சர்வ்ஸ் மற்றும் வெப்-கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு சம்மந்தம் இல்லாத வாக்காளர்கள் அல்லாத அனைத்து அரசியல் பிரமுகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள், பிப்ரவரி 25-ம் தேதி மாலை 6 மணிக்கு தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.  இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி அனைத்து திருமணங்கள் மற்றும் சமுதாய கூடங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் விருந்தினர் மாளிகைகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.  மார்ச் 2-ம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.