Exit Poll Results: மூன்று மாநில தேர்தல்களிலும் யார் யார் முன்னணி… Zee News – Matrize கருத்துக்கணிப்பு

வடக்கிழக்கு மாநிலமான திரிபுராவில் மொத்தமுள்ள 60 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த பிப். 16ஆம் தேதி நடைபெற்றது. பிற வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகலாந்து ஆகியவற்றில் உள்ள தலா 60 தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று (பிப். 27) நடைபெற்றது. 

இந்த மூன்று மாநிலங்களுக்குமான தேர்தல் முடிவுகள் வரும் மார்ச் 2ஆம் தேதி நடைபெற உள்ளது. அந்த வகையில், தற்போது, இந்த மூன்று மாநில தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய, Zee News-Matrize கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இதில், மூன்று மாநிலங்களிலும் மீண்டும் ஆளும் பாஜகவே அதிக இடங்களை கைப்பற்றும் என தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், மேகாலயாவில் பெரும்பான்மை இன்றி தொங்கு சட்டப்பேரவை அமையேவே அதிக வாய்ப்புள்ளது என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திரிபுரா

திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணி 29-36 இடங்களைக் கைப்பற்றும் என்று Zee News-Matrize வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவந்துள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி 13-21 இடங்களையும், திப்ரா மோதா கட்சி 11-16 இடங்களையும், மற்றவை 0-3 இடங்களைக் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இடதுசாரிகளின் கோட்டையாக இருந்த வடகிழக்கு மாநிலமான திரிபுராவை, 2018ஆம் ஆண்டு நடைபெற்ற கடந்த சட்டப்பரேவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தனதாக்கியது. அங்கு மொத்தம் 60 இடங்களில் 44 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை உடன் கடந்த முறை ஆட்சியமைத்தது.

திரிபுரா 2023ஆம் ஆண்டு 60 தொகுதிகளிலும் பிப்ரவரி 16 ஆம் தேதி ஒரே இடத்தில் மிகவும் அமைதியாக நடந்து முடிந்தது. தகுதியான 28.14 லட்சம் வாக்காளர்களில் கிட்டத்தட்ட 24.66 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்தின்படி, தகுதியான வாக்காளர்களில் கிட்டத்தட்ட 88% பேர் மாநிலத்தில் வாக்களித்துள்ளனர். திரிபுரா 2018 சட்டமன்றத் தேர்தலில் 89.38 சதவீதம் பேர் தகுதியான வாக்காளர்களைப் பதிவுசெய்தது. 

அதேசமயம் 2013இல் அதிகபட்ச வாக்குப்பதிவு 93 சதவீதமாக இருந்தது. குறிப்பிடத்தக்க வகையில், தெற்கு திரிபுராவில் உள்ள மனு சட்டமன்றத் தொகுதியில் அதிகபட்சமாக 92.09 வாக்குகள் பதிவாகியுள்ளன, அதே சமயம் டவுன் பர்தோவலி சட்டமன்றத் தொகுதியில் மிகக் குறைந்த வாக்காளர்கள் உள்ளனர். 80% பங்கேற்பு, அங்கு காங்கிரஸ் வேட்பாளர் ஆசிஷ் குமார் சாஹாவை எதிர்த்து முதல்வர் மாணிக் சாஹா போட்டியிடுகிறார்.

மேகாலயா 

Zee News-Matrize வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி 21-26 இடங்களிலும், திரிணாமூல் காங்கிரஸ் 8-13 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. மறுபுறம், பாஜக 6-11 இடங்களையும், காங்கிரஸ் 3-6 இடங்களை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாகலாந்து

தேசிய ஜனநாயக மக்கள் கட்சி – பாஜக கூட்டணி 35-43 இடங்களையும், தேசிய மக்கள் முன்னணி 2-5 இடங்களையு், தேசிய மக்கள் கட்சி 0-1, காங்கிரஸ் 1-3, மற்றவை 6-11 இடங்களைப் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.