Hero 421cc Adv: ஹீரோ 421cc அட்வென்ச்சர் விற்பனைக்கு எப்பொழுது ?

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எக்ஸ்பல்ஸ் 200 அட்வென்ச்சர் பைக்கினை விற்பனை செய்து வரும் நிலையில் 420 சிசி என்ஜின் பெற்ற ஹீரோ 400 ADV மாடல் நடப்பு ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னரே ஹீரோ நிறுவனம் 400சிசி அட்வென்ச்சர் பைக் தொடர்பான மாதிரியை காட்சிப்படுத்தியிருந்தது. தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில் இரண்டு ஹீரோ ரேஸ் பைக்குகள் பெங்களூருவில் INRSC சுற்றில் பங்கேற்றுள்ளன. இந்த இரண்டு பைக்குகளும் 400சிசிக்கு மேலான மோட்டார் சைக்கிள்களுக்கான பிரிவான குரூப் A பிரிவின் கீழ் இடம்பெற்றுள்ளன. இது, ஹீரோ நிறுவன 421cc என்ஜின் ஆக அமைந்திருக்கலாம் என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது.

இந்த புதிய 421சிசி என்ஜின் பெற்ற பைக் இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகமாகும். மேலும் இந்த பைக் மாடல் சிறந்த சாகச மோட்டார் சைக்கிளாக இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிப்படுத்தப்பட்ட அதே சேஸ் மற்றும் எஞ்சினைப் பயன்படுத்தி ஸ்பாட் ரேலி பைக்குகளில் உள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் XPulse 400 சாலைகளில் சோதனை செய்யப்பட்டதில் இருந்து, மோட்டார்சைக்கிளில் இரண்டு வேரியண்ட்கள் இருக்கும் என்பதையும், 40PS மற்றும் 40Nm டார்க் வெளிப்படுத்தும் அளவுக்கு என்ஜின் சக்திவாய்ந்ததாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 400 பைக் விலை சுமார் ரூ. 2.70 லட்சம், எக்ஸ்-ஷோரூம் விலையில்  ஆண்டின் பிற்பாதியில் அறிமுகப்படுத்தலாம். KTM 390 அட்வென்ச்சர் மற்றும் வரவிருக்கும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 நேரடியான போட்டியாக இருக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.