ஆலமரம் அடியோடு சாய்க்கப்பட்ட சம்பவம், அன்புமணி கண்டனம்! ஒப்பாரி வைத்து அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்! 

40 ஆண்டு ஆலமரம் வெட்டி வீழ்த்தப்பட்டது கண்டிக்கத்தக்கது. குற்றமிழைத்தவர்கள் மீது நடவடிக்கை தேவை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவருடைய சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு கிராமத்தில் சாலையோரம் இருந்த 40 ஆண்டு ஆலமரம் சட்டவிரோதமாக வெட்டி வீழ்த்தப்பட்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. ஆலமரம் வெட்டப்பட்டதற்கு இரங்கல் தெரிவித்து பசுமைத்தாயகம் அமைப்பும், பொதுமக்களும் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். 

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்க, கிளைகளை மட்டுமே வெட்ட அரசு அனுமதி அளித்த நிலையில் ஒட்டு மொத்த மரமும் சிலரால் வீழ்த்தப்பட்டது பெருங்குற்றம். இதற்கு காரணமானவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். 

40 ஆண்டுகள் அரும்பாடுபட்டு வளர்க்கப்பட்ட ஆலமரம் சிலரின் சுயநலத்திற்காக வீழ்த்தப்படுவதை அரசு அனுமதிக்கக்கூடாது. வெட்டப்பட்ட ஆலமரத்தை மீண்டும் அதே இடத்தில் நட்டு பாதுகாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தமிழ்நாட்டில் தேவையில்லாமல் ஒரு மரம் கூட வெட்டப்படக்கூடாது. அதற்காக தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட மாநில,  மாவட்ட பசுமைக் குழுக்கள் அனைத்து மாவட்டங்களிலும் முழு அளவில் செயல்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்” என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.