லண்டன் :இந்தியா, பிரிட்டன் இடையேயான ஒப்பந்தத்தின்படி, பட்டப் படிப்பு முடித்த மாணவர்கள் மேற்படிப்பு படிப்பதற்கான ‘விசா’வுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை துவங்கிஉள்ளது.
கடந்தாண்டு நவம்பரில் ஆசிய நாடான இந்தோனேஷியாவில் நடந்த, ஜி – ௨௦ மாநாட்டின்போது, பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய நாடான பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இடையே ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.
இதன்படி, பட்டப் படிப்பு முடித்த மாணவர்கள் மேற்படிப்புகளை படிப்பதற்கு, பரஸ்பரம் விசா வழங்கப்படும். இந்த விசா, இரண்டாண்டுகளுக்கானது.
இந்த திட்டத்தின் கீழ், ௧௮ – ௩௦ வயதுடையோர் மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். தங்கியிருக்கும்போது, வேலைக்கும் விண்ணப்பிக்கலாம்.
இதன்படி, பிரிட்டன் செல்வதற்கு இந்திய மாணவர்களும், இந்தியா வருவதற்கு பிரிட்டன் மாணவர்களுக்கும் விண்ணப்பிக்கும் நடைமுறை நேற்று துவங்கியது.
நாளை வரை விண்ணப்பிக்கலாம். பிரிட்டனின் லண்டனில் உள்ள இந்தியத் துாதரகத்தில், விண்ணப்பிப்பதற்கான நடைமுறை நேற்று துவங்கியது.
இதுபோல, புதுடில்லியில் உள்ள பிரிட்டன் துாதரகத்தில், இந்திய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தலா, ௨,௪௦௦ பேருக்கு விசா வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement