புதுடெல்லி: வரும் 2047ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக வேண்டும் என்ற இலக்கை எட்ட தொழில்நுட்பம் உதவும்’ என பிரதமர் மோடி கூறி உள்ளார் ‘தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாழ்க்கையை எளிதாக்குதல்’ என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது: சிறு தொழில்களை தொடங்குவதில் உள்ள விதிகளை குறைக்க நாங்கள் விரும்புகிறோம் எனவே தேவையற்ற விதிகளின் பட்டியலை உருவாக்கவும் தொழில்துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளோம் இதுவரை தொழில் தொடங்குவதில் இருந்த 40,000 விதிகளை நாங்கள் நீக்கி உள்ளோம்
டிஜிட்டல் புரட்சியின் நன்மைகள் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் சென்றடைவதை உறுதி செய்வதற்கான நவீன டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்கி வருகிறோம் உதாரணமாக, வரி செலுத்துவோரின் பிரச்னைகளை நிவர்த்தி செய்ய தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம் பல்வேறு துறைகள் தங்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் உலகத் தரத்தை எட்டுவதற்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து கூட்டாக சிந்திக்க வேண்டும் வரும் 2047ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாற வேண்டும் என்ற நமது இலக்கை எட்ட தொழில்நுட்பம் மிகவும் உதவியாக இருக்கும்இவ்வாறு பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்