புதுடில்லி: ” 2047 ல் இந்தியா வளர்ந்த நாடு என்ற இலக்கை, தொழில்நுட்பம் உதவியுடன் அடைய முடியும்”, என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எளிதாக வாழ்வது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: சிறு வணிகர்களின் பிரச்னைகளை குறைக்க வேண்டும் என விரும்புகிறோம். சிறுவணிகர்கள், தாங்கள் சந்திக்கும் தேவையற்ற பிரச்னைகளை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதுவரை 40 ஆயிரம் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளோம்.
நவீன டிஜிட்டல் உள்கட்டமைப்பை இந்தியா உருவாக்கி வருகிறது. டிஜிட்டல் புரட்சியின் பலன்கள் ஒவ்வொருவரையும் சென்றடைவதை நாங்கள் உறுதி செய்துள்ளோம். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வரி அமைப்பை முகமில்லாததாக மாற்றியதுடன், வரி செலுத்துபவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை தீர்க்க வேண்டும். மக்களின் வாழ்க்கையில், ஒரு தரமான வேறுபாட்டை ஏற்படுத்துவதற்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம். 5ஜி மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை குறித்து தற்போது அதிகம் விவாதிக்கப்படுகிறது.
மருத்துவம், விவசாயம், கல்வி உள்ளிட்டவற்றில் பெரும் மாற்றத்தை இவை ஏற்படுத்தும். பொது மக்கள் சந்திக்கும் முக்கிய பிரச்னைகளை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தீர்வு காண்பது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு என்பதற்கு தொழில்நுட்பம் அடிப்படையை ஏற்படுத்தி கொடுத்ததுடன், ஜன்தன் யோஜனா, ஆதார் மற்றும் மொபைல் எண் ஆகியவை, ஏழைகளுக்கு அரசின் பலன்கள் சென்றடைவதை உறுதி செய்தது. 21ம் நூற்றாண்டு தொழில்நுட்பம் சார்ந்தது. அதனை, டிஜிட்டல் இணைய தொழில்நுட்பம் என்று மட்டும் கட்டுப்படுத்த முடியாது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement