மோசடி நடவடிக்கை ஒன்று தொடர்பில் இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இதன்படி, லொத்தர் சீட்டில் பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசி அழைப்பு அல்லது வட்ஸ்அப் செய்தி மற்றும் குறுஞ்செய்தி ஆகியவை உங்களுக்கு வந்தால் அது குறித்து விழிப்புடன் இருக்குமாறு மத்திய வங்கி பொதுமக்களை கோரியுள்ளது.
இவ்வாறான அழைப்புக்கள் முற்றிலும் பொய்யானவை என்றும் மோசடியான நடவடிக்கை எனவும் மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆதாரங்களை அனுப்புங்கள்
நீங்களும் இவ்வாறான மோசடிக்கு ஆளாகியிருந்தால் அல்லது அவ்வாறான மோசடிகள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்குத் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பணம் வைப்பு செய்யப்பட்ட / வைப்பு செய்யப்படுவதாகக் கூறப்படும் கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர், சம்பந்தப்பட்ட வங்கி, கைத்தொலைபேசி எண் மற்றும் தொடர்புடைய செய்திகளின் ஸ்கிரீன் ஷொட்களுடன் நிதி புலனாய்வுப் பிரிவுக்கு அனுப்புமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.