எடப்பாடி மீது சொத்து குவிப்பு வழக்கு? மேலிடம் போட்ட பக்கா ஸ்கெட்ச்: இந்த தடவை மிஸ் ஆகாதாம்!

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக செயல்படுவதற்கு உச்ச நீதிமன்றம் கிரீன் சிக்னல் காட்டியுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி (edappadi palanisamy) நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார். அத்துடன் பொதுச்செயலாளர் தேர்தல் அறிவித்து விரைவில் அசைக்க முடியாத உச்ச பதவியில் அமர திட்டமிட்டு வருகிறார். ஆனால் அவரது நிம்மதியை குலைக்கும் விதமாக ஹாட் தகவல்கள் வருகின்றன.

வலுப்பெறும் அதிமுக, உஷாராகும் திமுகஅதிமுக இரட்டை தலைமையில் இருந்தவரை உள்ளுக்குள்ளே பகை ஒன்று புகைந்து கொண்டிருந்தது. அத்துடன் டெல்லியில் சொல்லுக்கு கட்டுப்பட்டு செயல்பட்டே ஆகவேண்டிய கட்டாயம் இருந்ததால் கிடைக்கும் இடத்தில் எல்லாம் திமுக ஸ்கோர் செய்தது. 2019 முதல் கிட்டதட்ட அனைத்து தேர்தல்களிலும் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி திமுகவே வெற்றிக் கொடி நாட்டி வருகிறது. அதிமுக பொதுக்குழு தீர்ப்பில் எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து கட்சி ஒற்றை தலைமைக்கு வந்திருப்பதால் திமுக உஷாராகியுள்ளது.
அதிமுக தலைமைக்கு நெருக்கடிஉட்கட்சிப் பிரச்சினை ஒரு வழியாக முடிவுக்கு வந்து நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் எந்த பக்கம் செல்வது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு பாதை காட்டியுள்ளதால் அதிமுக இழந்த வலிமையை விரைவில் பெறும் என அரசியல் விமர்சகர்களும் கூறுகின்றனர். இந்த சூழலில் திமுக அரசு அதிமுக தலைமைக்கு நெருக்கடி கொடுக்க தயாராகி வருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறையின் கவனத்தை அதிமுக நோக்கி திருப்ப உத்தரவுகள் போயுள்ளதாக கூறுகிறார்கள்.
குறிவைக்கப்படும் எடப்பாடி பழனிசாமிதிமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறினார். ஆனால் ஆட்சிக்கு வந்து இந்த 21 மாதங்களில் ஒரு முன்னாள் அமைச்சர்கூட லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் கீழ் கைது செய்யப்படவில்லை. பிற அமைச்சர்கள் வீடுகள், அலுவலகங்களில் ரெய்டு கூட நடத்தப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமியை குறிவைத்து ரெய்டோ, விசாரணையோ நடைபெறவில்லை.
திமுகவை நோக்கி திருப்பிய எடப்பாடிகொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி விசாரிக்கப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில் அவருக்கு நெருக்கமானவர்கள், உதவியாளர்கள் என பலரும் விசாரிக்கப்பட்ட நிலையில் எடப்பாடி விசாரிக்கப்படவில்லை. கொடநாட்டை வைத்து திமுக அரசியல் செய்ய நினைத்த போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி திமுகவை நோக்கி அதை திருப்பி விட்டார்.
சொத்து குவிப்பு வழக்கு!அதிமுக ஆட்சிக்காலத்தில் தான் கொடநாடு வழக்கில் கைது செய்து விசாரணை நடத்தினோம். ஆனால் திமுக ஆட்சியில் அவர்களுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இதனால் திமுகவுக்கும் அவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். இதன் பின்னரும் சும்மா இருக்க கூடாது என மேலிடம் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கு தொடர முடிவெடுத்துள்ளதகா தகவல் வெளியாகியுள்ளது.
தாராளம் காட்டிய எடப்பாடிக்கு சேதாரம்!லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பில் இருப்பதால் எஸ்.பி.வேலுமணி (SP.Velumani), தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்கள் தங்கள் ஸ்வீட் பாக்ஸ்களை இடைத்தேர்தல் சமயத்தில் திறக்க தயக்கம் காட்டினர். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ தயக்கமே இல்லாமல் பாக்ஸ்களை அள்ளி கொட்டி விட்டதாக சொல்கிறார்கள். இந்த தகவல் மேலிடத்துக்கு பாஸ் செய்யப்பட்ட நிலையில் இனியும் பொறுத்திருக்க வேண்டாம் என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
ஜெயலலிதாவை போல் எடப்பாடிக்கு செக்!​​
இந்நிலையில் விரைவில் லஞ்ச ஒழிப்புத்துறை எடப்பாடி பழனிசாமி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடர உள்ளதாக சொல்கிறார்கள். ஜெயலலிதாவை 25 ஆண்டுகளுக்கும் மேலாக பின் தொடர்ந்து வந்த சொத்துகுவிப்பு வழக்கை போல் வலுவானதாக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதாம். அது மட்டுமல்லாமல் ஈரோடு கிழக்கில் ஸ்வீட் பாக்ஸ் பரிமாற்ற விவரங்கள் குறித்த முழுமையான ரிப்போர்ட் எடுக்கப்பட்டுள்ளதாம். அதை வைத்து மாஜி அமைச்சர்கள் சிலரது வீடுகளில் மீண்டும் ரெய்டு நடக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.