ஜம்மு-காஷ்மீர்,
ஜம்மு-காஷ்மீரில் சிறுபான்மையினராக உள்ள இந்து மதத்தினரான பண்டிட் சமுகத்தினரை குறிவைத்து தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. பயங்கரவாத தாக்குதலை தடுக்க பாதுகாப்பு படையினர் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பண்டிட் சமுகத்தை சேர்ந்தவரை பயங்கரவாதிகள் கடந்த ஞாயிற்றுக் கிழமை சுட்டுக்கொன்றனர். அச்சென் பகுதியை சேர்ந்த சஞ்சய் சர்மா (வயது 40) என்பவரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று, பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பண்டிட் சஞ்சய் சர்மாவின் உடலுக்கு இஸ்லாமியர்கள் இறுதி சடங்கு செய்தனர். அந்த பகுதியில் வசித்து வந்த காஷ்மீர் பண்டிட் இனத்தை சேர்ந்த ஒரே நபர், சஞ்சய் சர்மா தான் என்ற நிலையில், அவரது இறுதிச் சடங்கை நடத்த அப்பகுதி இஸ்லாமியர்கள் உதவி செய்தனர். இது குறித்து சஞ்சய் ஷர்மாவின் உறவினர்கள் கூறுகையில், தக்க நேரத்தில் அப்பகுதி இஸ்லாமியர்கள் பெரிதும் உதவி செய்ததாகக் கூறினர்.