கோர்ட்டில் டிப் டாப்பாக உலா வந்த `போலி' வக்கீல்; நம்பி ஃபீஸ் கட்டி ஏமாந்த பெண்! – என்ன நடந்தது?

​தேனி மாவட்டம், அரண்மனைபுதூரை​ச்​ சேர்ந்தவர் துர்க்கை அம்மாள்​. இவர் தன்னுடைய தந்தை பாண்டியன், பூர்வீக சொத்தை மகன், மகள்களுக்குத் தெரியாமல் வேறொரு நபருக்கு விற்பனை செய்தது தொடர்பாக தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தி​​லுள்ள உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொ​டர முடிவெடுத்திருக்கிறார். இதையடுத்து அவர் நீதிமன்றம் சென்றபோது ​​அங்கிருந்த சக்திவேல் என்பவரிடம், `சொத்து தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு போட வேண்டும், யாரைப் பார்ப்பது’ எனக் கேட்டிருக்கிறார். ​

தேனி நீதிமன்றம்

வெள்ளை சட்டை, கருப்பு பேன்ட் அணிந்து ​​வழக்கறிஞர் போல் இருந்த ​அவர், ​​“நானும் வழக்கறிஞர்தான். இந்த வழக்கை உங்களுக்கு முடித்துக் கொடுத்து சொத்தை மீட்டுத் தருகிறேன்”​ எனக் கூறியிருக்கிறார். இதை நம்பிய துர்க்கை அம்மாள் அவரிடம், முதலில் வழக்கு ​பதிவுசெய்ய 3​,000 ரூபாயும், அதனைத் தொடர்ந்து இரண்டு நாள்கள் கழித்து வழக்கு விசாரணை நடத்த 25,000 ரூபாயும் என இரண்டு முறையாக மொத்தம் 28,000 ரூபாய் ​கொடுத்திருக்கிறார். 

​ஆனால், பணம் கொடுத்து ஒரு வாரம் ஆகியும் நீதிமன்றத்தில் வழக்கு ​பதிவு எதுவும் செய்யா​மல், சக்திவேல் காலதாமதம் செய்துவந்திருக்கிறார். இதையடுத்து துர்க்கை அம்மாள் நீதிமன்றத்துக்கு வந்து சக்திவேலிடம், `வழக்கு பதிவுசெய்யவில்லை என்றால், நான் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுங்கள்’ எனக் கேட்டிருக்கிறார். 

கைது

அப்​போது சக்திவேல், தகாத வார்த்தைகளால் திட்டி, `பணம் கேட்டு வந்தால் உன்னைக் கொலைசெய்து விடுவேன்’ என மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து , ​​துர்கை​ அம்மாள்​ நீதிமன்றத்திலுள்ள வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளைச் சந்தித்து ​நடந்ததை தெரிவித்​திருக்கிறார். வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இது குறித்து விசாரித்தபோது, சக்திவேல் என்பவர், வழக்கறிஞரே இல்லை, என்பதும், வழக்கறிஞர் போல் நடித்து நீதிமன்றத்துக்கு வந்த பெண்ணிடம் ​28,000 ரூபாய் பண​த்தை ​ஏமாற்றியிருப்பதும் தெரியவந்தது.

தேனி நீதிமன்றம்

இதையடுத்து ​தேனி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் பார் கவுன்சில் நிர்வாகிகள் போலி வழக்கறி​ஞர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதனடிப்படையில், பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் போலி வழக்கறிஞர் சக்திவேலை கைது சிறையில் அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.