
சங்கமித்ராவில் பூஜா ஹெக்டே….?
சுந்தர் சி இயக்கத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் நடிக்க சில ஆண்டுகளுக்கு முன் சங்கமித்ரா பட அறிவிப்பை வெளியிட்டனர். கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தபட போஸ்டரை வெளியிட்டு அமர்க்களம் செய்தனர். சரித்திர கதையில் இந்த படத்தை உருவாக்க திட்டமிட்டு இருந்தார் சுந்தர் சி. ஆனால் பொருளாதார பிரச்னையால் இந்த படம் அப்போது டிராப் ஆனது.
இந்நிலையில் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளதாக தொடர்ச்சியாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் படத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாம். குறிப்பாக நாயகன் ஜெயம் ரவி விலகிவிட்டார். அவருக்கு பதில் விஷால் நடிப்பதாக செய்திகள் வந்தன. இப்போது நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அவருக்கு கணிசமான தொகையை சம்பளமாக தரவும் பேசி வருகின்றனராம்.