ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களின்
முன்னுரிமையுடன் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் புதிய கூட்டணி அமைக்கப்படும்
என்று சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அரசியல் நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவோ
அல்லது தானோ ஐக்கிய மக்கள் சக்தியைப் பிளவுபடுத்த விரும்பவில்லை என்றும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “நான் முதலில் அரசில் இணைந்தபோது, ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பல
உறுப்பினர்களை அழைத்து வரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
மக்களின் ஆதரவு தேவை
ஆனால், ரணில்
விக்ரமசிங்க வேண்டாம் என்று என்னிடம் கூறினார். எனினும், அண்மையில்
ஹிக்கடுவையில் அவரைச் சந்தித்தபோது, ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து
குறுக்கே செல்ல விரும்பும் உறுப்பினர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவதற்கான
நேரம் இது என்று அவரிடம் கூறினேன்.
இந்த டிசம்பர் மாதம் வரை நாட்டில் ஒரு வேலைத்திட்டத்தை
நடைமுறைப்படுத்தவுள்ளோம். இந்தத் திட்டம் தொடர மக்களின் ஆதரவு தேவை. அதுவரை
ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவுக்கு மக்கள் பலமாக இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.