உக்ரைனின் கிழக்கு பகுதிகளில் ரஷ்ய துருப்புகளுக்கு எதிரான போரை வழிநடத்தி வந்த மூத்த இராணுவ தளபதி எட்வார்ட் மொஸ்கலியோவை பணிநீக்கம் செய்வதாக ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.
கிழக்கு பகுதியில் தீவிரமடையும் போர்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதல் 1 வருடத்தை தாண்டி இருக்கும் நிலையில், டான்பாஸை உருவாக்கும் உக்ரைனின் இரண்டு கிழக்கு பகுதிகளை கைப்பற்ற ரஷ்ய படைகள் தீவிரமாக முயன்று வருகின்றனர் என்று ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்து இருந்தார்.
மேலும் சமீபத்திய வாரங்களில் நாட்டின் கிழக்கு பகுதியில் இராணுவ நிலைமை கடினமானது மற்றும் வேதனையானது என்றும் விவரித்து இருந்தார்.
PRESIDENT OF UKRAINE
இதற்கிடையில் உக்ரைனில் பலத்த உயிர் சேதங்களை ரஷ்ய படைகள் எதிர்கொண்டு வந்தாலும், தாக்குதல்களை அதிகரித்து பாக்முட் நகரத்தை கைப்பற்றும் முயற்சிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இராணுவ தளபதி
பணிநீக்கம்
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, நாட்டின் போர்க்குணமிக்க கிழக்கு பகுதியில் ரஷ்ய துருப்புகளுக்கு எதிராக போரை வழிநடத்தி வந்த மூத்த ராணுவ தளபதி எட்வார்ட் மொஸ்கலியோவை பணிநீக்கம் செய்துள்ளார்.
இது தொடர்பாக வெளியான ஒரு வரி ஆணையில், டான்பாஸ் பிராந்தியத்தில் உக்ரைனின் கூட்டுப் படைகளின் தளபதியாக செயல்பட்டு வந்த எட்வார்ட் மொஸ்கலியோவை பணிநீக்கம் செய்வதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
PRESIDENT OF UKRAINE
கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் தினசரி உரையில், இராணுவ தளபதிகளை பட்டியலிடும் போது எட்வார்ட் மொஸ்கலியோ-வின் பெயரும் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.