சென்னை மருத்துவமனையில் பிரதமர் மோடியின் சகோதரர் அனுமதி!!

உடல்நலக்குறைவு காரணமாக பிரதமர் மோடியின் சகோதரர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் ஆன்மிக சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் தாமோதர்தாஸ் மோடிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இவர் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட கோவில்களும் குடும்பத்துடன் சென்று ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில் இவருக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது.இதையடுத்து அவர் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுநீரக பிரச்சனை காரணமாக, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.