விழுப்புரம் அருகே கடகனூர் சாலையில், ’டாடா ஏஸ்’ வாகனம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த வாகனத்தில் வந்த 20க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் சென்ற நிலையில் பலர் படுகாயம்; ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரவு 8.30 மணிக்கு நடந்த இந்த விபத்தில் உயிரிழந்த மாணவன், சென்னை அண்ணாநகரை சேர்ந்த ஷாமுவேல் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், உயிரிழந்த மானவன் சென்னை லயோலா கல்லூரி மாணவன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து முதல்கட்ட தகவலின் படி, கடகனூர் அருகே லோடுவேன் கவிழ்ந்த விபத்தில் சென்னை லயோலா கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
20க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர். ஆலம்பாடி தொண்டு நிறுவனத்தில் தங்கி கிராமங்களில் சமூக சேவையில் ஈடுபட்ட மாணவர்கள் 69 பேர், தெருக்கூத்து பார்ப்பதற்காக இரண்டு டாட்டா ஏசி மினி லோடு வேன்களில் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.