புதுடெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தில் கியூட் நுழைவுத் தேர்வு மூலம் தேர்வான மாணவர்கள் புதிய மொழி கற்கலாம் என தமிழ், தெலுங்கு மொழிப் பாடத்தை தேர்வு செய்து சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளனர் நாடு முழுவதும் அனைத்து ஒன்றிய பல்கலைக்கழகங்களில் இளங்கலை உள்ளிட்ட படிப்புகளுக்கு, தேசிய தேர்வு முகமை நடத்தும் கியூட் தேர்வு கடந்த ஆண்டு கட்டாயப்படுத்தப்பட்டது இந்த கியூட் தேர்வை எழுதி முதல் பேட்ச் மாணவர்கள் ஒன்றிய பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ளனர் புதிய தேசியக் கல்விக் கொள்கைபடி, கட்டாயப் பாடத்துடன், ஏதேனும் ஒரு பிராந்திய மொழியை விருப்ப பாடமாக (நான்-மேஜர்) எடுத்து மாணவர்கள் படிக்க வேண்டும் அந்த வகையில், டெல்லி பல்கலைக்கழகத்தில் சேர்ந்த மாணவர்கள் பலர் பிஏ அரசியல் அறிவியலுடன் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளை விருப்பப் பாடமாக தேர்வு செய்தனர் புதிய மொழியை கற்கலாம் என கல்லூரிக்கு சென்ற அவர்களுக்கு பெரும் சிக்கல் நேர்ந்துள்ளது
இந்தி, சமஸ்கிருதத்தை பெரும்பாலான மாணவர்கள் தேர்வு செய்வதால் அந்த பாடங்களுக்கு மட்டுமே முறையாக ஆசிரியர்கள் உள்ளனர் தமிழ், தெலுங்கு போன்ற பிராந்திய மொழி பாடங்களுக்கு ஆசிரியரும் இல்லை பாடங்களும் உயர் தரத்தில் இருப்பதால் மாணவர்கள் செய்வதறியாமல் திகைத்துள்ளனர் தங்களுக்கு, இந்தி அல்லது சமஸ்கிருதம் மொழியை மாற்றித் தர அவர்கள் நிர்வாகத்திடம் பலமுறை கோரியும் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது இதனால் வரும் செமஸ்டர் தேர்வில் மொழி பாடத்தில் தோல்வி அடையும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர் இந்த பிரச்னையால் மாணவர்களில் பலரும் மீண்டும் கியூட் தேர்வு எழுதி புதிதாக வேறு விருப்ப மொழி பாடத்துடன் மறுபடியும் முதலாம் ஆண்டிலிருந்து சேருவதற்கான நடவடிக்கையிலும் இறங்கி உள்ளனர் மாணவர்கள் பாடங்களை தேர்வு செய்யும் முன்பாகவே விழிப்புடன் இருந்திருக்க வேண்டுமென பல்கலைக்கழகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது