டெஸ்டில் ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற நியூசிலாந்து!!

இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டு இழப்புக்கு 435 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதைத் தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து 209 ரன்னில் ஆல் அவுட் ஆகி ‘பாலோ-ஆன்’ பெற்றது. 226 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 3 நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்தது.

கேன் வில்லியம்சன் 25 ரன்னுடனும், ஹென்றி நிகோல்ஸ் 18 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 4வது நாளில் நியூசிலாந்து அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 2-வது இன்னிங்சில் நியூசிலாந்து 483 ரன்கள் குவித்தது.

இங்கிலாந்து அணிக்கு 258 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 5ஆவது நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இங்கிலாந்து அணி 256 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

வெலிங்டனில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 1 ரன்கள் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.